நினைவுகள்
நினைவுக்குவியல்கள் சிதறிக்கிடக்க
நித்திரை தொலைத்து நின்னையே
சுற்றி திரிகிறது மனசு ...
மனசெல்லாம் நிறைத்துவிட்டு
மறைந்து போனது ஏனோ ...
மறக்கமுடியாமல் மௌனமாய்
மனமது அசைபோடுகிறது
மகிழ்ந்திருந்த தருணங்களை ...
மரணம் ஆட்க்கொண்டு , மண் மூடும்
முன் வந்து மனம் அதை மகிழ்விக்க
மனமுவந்து மடை திறப்பாயா ...
மரணமும் மகிழ்வாய் மாறிவிடும்
மங்கை நின் வாய் திறந்து சொல்லும்
வார்த்தைகளாலே ....
இவன்
மகேஸ்வரன்.கோ (மகோ )
+91-98438 12650
கோவை -35