ஆவாரம் பூ
எட்டுப் புள்ளி வைத்து
கோலமிட்டேன்
எட்டு வண்ணத்தில்...
எட்டி நின்று பார்க்கும் போது
நிலவொன்று...!!
தரையிரங்கி வரக் கண்டேன்...
நிலவில் பூசிய மஞ்சள் ஒளியில்
மின்னல் கீற்றுகள் மின்னக் கண்டேன்..
கொத்து கொத்தாக
இதமான காற்றில் அசைந்தாடும்
ஆவாரம் பூவோ..?
அவளது மஞ்சள் பூசிய முகம்!!