பாண்டிச்செல்வி அழகர்சாமி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பாண்டிச்செல்வி அழகர்சாமி
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  11-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Jun-2021
பார்த்தவர்கள்:  430
புள்ளி:  70

என் படைப்புகள்
பாண்டிச்செல்வி அழகர்சாமி செய்திகள்

என் உயிரின் உயிரே!
உறைபனியாய்
உறைந்து கிடக்கிறேன்...
என் உயிரில் உறைந்த
உன் நினைவுகளால்...!!

மேலும்

பூமியின் சூட்டை தணித்து
தீராத தாகத்தை தீர்க்கிறது
மழை!

மேலும்

உன் கரம் பிடிப்பேன் என்று
காதல் செய்த கள்வனால்
தூக்கி எறியப்பட்டாய்
வேண்டாத காகிதமாய்..!!
என் தேடுதல் வேட்டையில்
கிடைத்த பொக்கிஷம் அல்லவா நீ...
உன்னை தூக்கி எறிவேனோ?
இல்லவே இல்லை...
என்னை மகிழ்விக்கும் பட்டமாய்
உனக்கு அவதாரம் கொடுப்பேன்...
அதை தாங்கிப் பிடிக்கும்
காற்றாடி கயிறாய் நானிருப்பேன்...
கயிறோடு இணைந்த காகிதமாய்
வானில் உலா வருவோம்
கணவன் மனைவியாக
நீயும் நானும்...!!

மேலும்

ஓர் அழகான மாலைப்பொழுதில்...

பேருந்தின் வரவை நோக்கி காத்திருக்க...

சாரல் மழையோ உன் மீது கீதம் பாட..

நானோ அத்திபூத்தாற் போல்
உன் முன் வந்து நிற்க...

எனைப் பார்த்ததும் உனையறியாமல்...

சாரல் மழையின் கீதத்தில்
களைந்திருந்த ஆடையை சரிசெய்ய..

நானோ கருநிற துணிப் போர்த்திய
குடையாய் உன்னருகில் வர...

உன் ஈர மேனியெங்கும் நடுநடுங்க...

ஆரணிப்பட்டில் தீட்டப்பட்ட அழகு மயிலாய் நீ இருக்க...

அள்ளி அணைக்கத் தூண்டும் உன்னழகில் நான் மயங்க...

உன் பூமலர்ந்த முகமதை சாரல்
துளிகள் தொட்டுத் தழுவ...

என் குடையதில் உனக்குப்
பாதி இடம் கொடுக்க...

உன் விழிகளிரண்டும் எனைப் பார்க்க...

மேலும்

அப்பா வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல நேர்ந்தது. தன் அன்பு மகள் கண்ணம்மாவை தன் தம்பி வீட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க எண்ணினார் சாமிக்கண்ணு
கதிரவன் தன் முகத்தை மெல்ல சாய்க்க ஆர்பித்தான்."நாங்க தான் எல்லாருக்கும் வடிச்சுக்கொட்டணும்",எல்லாம் நா வாங்கி வந்த வரம்ன்னு முனுமுனுக்கவே சித்தப்பாவும் உள்ளே நுழைந்தார்.நாட்கள் ஓடஓட சித்தியின் வசைபாடுகள் அதிகமாகி கொண்டே போனது கண்ணம்மாவுக்கு.
சித்தியின் வசைபாடுகளால் கண்ணம்மாவை விடுதியில் கொண்டு சேர்த்தார் சித்தப்பா.மாதம் ஒரு முறை வீட்டிலிருந்து சாப்பாடு வரும்.ஆனால், பாப்பா "இன்னைக்கு சித்திட்ட கேட்டேன் டா அவ செஞ்சு தர மாட்டேன்"னு சொல்லி

மேலும்

பெண்கள் வேலையிடத்தில் தவறான சித்தரிப்பு

பெண் ப்ரோமோஷன் பெற்றால்
மேலதிகாரியிடம் நெருங்கிப் பழகினாள்
விரைவில் முன்னேற்றம் பெற்றால்
அவள் நண்பிகள்
கூட வேலை செய்பவர்கள் என நினைப்பார்கள்

உண்மை கதை ,
கற்பனை கதை .
கவிதை
எழுதவும்

மேலும்

மலர்கள் ஒரு மனித மரணத்தை அலங்கரிக்க மரணிக்க படும் அழகு மலர்கள் வேதனைக்குரியது. 30-Jun-2021 1:36 pm
மனம் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை நினைத்து நிகழ்காலத்தை இழக்காமல் நம்முடைய எதிர்காலமும் முடங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் 30-Jun-2021 1:33 pm
தவறு செய்பவர்களுக்கு தண்டனை உண்டு தமிழகத்தின் தலைநகரின் இதயமாக கருதப்படும் நகரில் இதய நாயகனாக வலம் வந்தவர் ராஜா என்ற இளைஞர். அவர் குடும்பத்தில் அப்பா அம்மா அவர் மட்டும். ஒரே பிள்ளை என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டார். நினைத்ததை சாதிப்பவன் அவருக்கு அவர் அம்மா அதிக செல்லம் கொடுத்து வந்தார். அதனால் ராஜா பல தவறுகள் செய்து வந்தான். பொறுப்பின்றி ஊரை சுற்றி வந்தான். அவன் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு குறைந்த சம்பளம்தான். மிகவும் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்திவந்தார். ராஜாவை அவன் விருப்பப்படி படிக்க வைத்தார். ராஜா நன்றாக படைத்தார் ஆனால் பெண்கள் விஷயத்தில் சபல புத்தி உடையவன். ஆனால் கடின உழைப்பும் விடாமுயற்சியும் உடையவன். பல மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவன். ஒரு வழியாக அவனது படிப்புகளும் முடிந்தன. மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டான் ஆனால் அவன் அப்பாவுக்கு அவர் வாங்கும் சம்பளத்தில் மேல் படிப்பு என்பது முடியாத காரியம். அவனுக்கு உயர் படிப்பு படிக்க வேண்டும் என்பது மிகுந்த ஆசை. இறுதியாக அவன் ஒரு முடிவுக்கு வந்தான் பகுதி நேரமாக வேலை செய்து கொண்டு மாலை கல்லூரியில் மேற்படிப்பு படிக்க முடிவு செய்தான். அவன் நினைத்தது போலவே மாலை நேர கல்லூரிக்கு அருகில் ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் பகுதி நேர வேலையும் கெடுத்தது. பகுதி நேர வேலையில் வரும் சம்பளத்தில் மாலை நேர கல்லூரி படிப்பையும் தொடர்ந்தான். ராஜா புதிதாக சேர்ந்த அலுவலகத்தில் மொத்தம் ௬ நபர்கள் இருந்தனர். அந்த ௬ நபர்களில் பெண் பணியாளார்களும் உண்டு. ராஜாவுக்கு வேலை தொடக்கத்தில் மந்தமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல சூடுபிடித்து. ராஜாவுக்கு திறமை அதிகம் இருந்ததால் நிர்வாக தலைமை அவனுக்கு பல பொறுப்புகளை கொடுத்தது. நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வான் அதனால் நிர்வாகம் அவரை முழுமையாக நம்பியது. அவன் தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆரம்பத்தில் மெல்ல உரசிப் பார்த்து. இணங்குபவர்களாய் தன்வசப்படுத்தி மன்மத லீலைகளை தொடருவேன். அவரது உறவுக்கு ஒத்து வராத பெண்களை தனக்கு இருந்த செல்வாக்கால் வேலையிலிருந்து தூக்கி விடுவேன். நிர்வாக தலைமையிடம் நெருக்கமாக இருந்தால் அனைத்தையும் அரங்கேற்றினார். நாள் அடைவில் இவன் மீது நிர்வாகத்திற்கு அதிக நம்பிக்கை வந்ததால் அனைத்து பொறுப்புகளையும் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் நிறுவனத்திற்கு தேவையான பணி ஆட்களை எடுப்பது தேவை இல்லை என்றால் தூக்குவது என்று அணைத்து பொறுப்புகளும் ராஜாவுக்கு கொடுக்கப்பட்டது. அவரது லீலை நாளடைவில் அதிகமானது தன் ஆசைக்கு இணங்காத பெண்களை வேலையை விட்டுத் தூக்குவது தனக்கு ஒத்துவரும் பெண்களை வேலைக்கு எடுப்பது இப்படியாக அவரது அட்டகாசம் அதிகமானது. போதை குறைக்கு நிர்வாகத்தின் முதலாளிக்கு பெண் உதவியாளர் தேவை பட்டது அதை தேர்ந்தெடுக்கும் பணியும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பொறுப்பு வந்தவுடன் ராஜா வேறுவிதமாக யோசித்தான் அழகான பெண்ணை தேர்வு செய்து முதலாளியும் காம வலையில் விழ திட்டமிட்டான். அதையும் நினைத்த மாதிரி செய்து முடித்தான் நினைத்தபடி அரங்கேறியது. அப்படியே அவனது காம லீலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. அலுவலகத்தில் பணிக்கு வரும் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடினான். தன் நினைத்த அனைத்தும் அரங்கேறும் அளவுக்கு அலுவலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அவனது ராஜாங்கமே முழுமையாக நடைபெற்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில பெண்கள் கடுமையாக போராடி வேலை பார்த்தனர். ஒரு கட்டத்தில் தனக்கு காமத்தில் சரி செய்பவர்களுக்கு முதலாளியிடம் சொல்லி பணி வாங்கித் தருகிறேன் என்று சொல்லி செயல்பட்டான். இவற்றிற்கு ஆசைப்பட்டு சில பெண்கள் அவனோடு உடலை பகிர்ந்து கொண்டனர். ராஜா வீட்டுக்கு செல்வதை குறைத்துக்கொண்டு முழு மூச்சாக அலுவலகத்துக்கு பாடுபட்டான். எந்த வேலையாக இருந்தாலும் நேரம் காலம் பார்க்காமல் செய்து முடித்தான். தன்னால் முதலாளியிடம் மேலும் அதிக நம்பிக்கை கிடைத்தது. ராஜா ஒரு சூழ்நிலையில் அலுவலகத்தை தன் வீடாகவே ஆக்கிக்கொண்டான். ராஜாவுக்கு பெண்கள் விஷயத்தில் அணைத்து சுகமும் எளிமையாக கிடைத்ததால் திருமண அசைக்கலையே விட்டுவிட்டான். கடினமாக உழைக்க வேண்டியது பல வழியில் பணம் சம்பாதிக்க வேண்டியது அந்த பணத்தை தேவையில்லாமல் செலவு செய்து அளிக்க வேண்டியது இப்படியே வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. ராஜாவின் தொந்தரவால் கண்ணீர் விட பெண்கள் அதிகம். இப்படி ராஜா ஒரு பக்கம் காமத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான். மற்றொருபக்கம் ராஜா பணிக்கு சேர்த்த பெண் முதலாளியை கைக்குள் போட்டுக்கொண்டு அடிக்கடி காம உறவுகள் அரங்கேறியது. ஒரு கட்டத்தில் முதலாளியின் உதவி பணிப்பெண் முதலாளியை மிரட்ட ஆரம்பித்தார். உடனே முதலாளி ராஜாவை கூப்பிட்டு முழுவிவரத்தையும் சொல்லி முடித்து வைக்கும்படி கூறியுள்ளார். உடனே ராஜா அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக சில தொகையை கொடுத்து முடித்து வைத்தார். அந்த பெண்ணுக்கு கொடுத்த தொகையில் இருந்து ராஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சுருட்டிக்கொண்டு. ராஜாவின் பெற்றோர்கள் ராஜாவிற்கு வயது அதிகம் ஆவதால் திருமணத்திற்கு எவ்வளவோ சொல்லியும் அவன் ஒத்து வரவில்லை. அவன் அப்பாவுக்கும் திடீரென்று இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார் சில தினங்களில் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். ராஜா அம்மாவோடு தனித்து வாழத் தொடங்கினான். சிறுது நாட்கள் துக்கம் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அந்த துக்கமும் மறைந்து மீண்டும் காமலீலைகள் ஈடுபட்டான். அவரது அட்டகாசங்கள் அளவுக்கு மீறி எல்லை இல்லாமல் இருந்தது. இறுதியாக அவன் ஒரு காம சைக்கோவாக மாறிவிட்டான். அவன் உடம்பு முழுவதும் காம ரத்தம்தான் ஓடிக்கொண்டிருந்தது. நேரம் காலம் பார்க்காமல் எந்த பணியாக இருந்தாலும் நம்பிக்கையோடு செய்து வந்ததால் தன் முதலாளியிடம் நம்பிக்கை பெற்றான். அதனால் தான் வைத்ததுதான் சட்டம் என்று அலுவலகத்தில் கொடிகட்டி பரந்தன். அலுவலகத்தில் ராஜா தன் ஆசைக்கு இணங்காத பெண்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்தான் இது அவரது வாடிக்கையாக இருந்தது. எப்பொழுதும் அலுவலகத்தில் தனக்கு இரண்டு செட் துணிகள் வைத்திருந்தான். இரவு நேரம் கூட பார்க்காமல் வேலை செய்வான். அதனால் முதலாளியிடம் நல்ல பெயர் கிடைத்தது அதை பயன்படுத்தி பல தவறுகள் செய்தான். இப்படி அவன் செயல்கள் சாதாரணமாக இருந்தாலும் அனைத்து தவறுகளும் மிகவும் கொடுமையானது. மீண்டும் ஆவணத்தை எவ்வளவோ எடுத்து சொல்லி திருமணம் செய்து கொள் என்றார் ஆனால் அவர் அதையும் கேட்கவில்லை. ஏனென்றால் அவனுக்கு தேவையான அனைத்தையும் அவன் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டார் மேலும் பணம் கொடுத்து விபச்சாரத்தில் பெற்றுக்கொண்டான். ராஜாவிற்கு வயது அதிகரிக்க உடல் தளர ஆரம்பித்தன. அவனை எதிர்க்க எந்த பெண்ணும் முன்வராததால் அவன் காய் ஓங்கி காணப்பட்டது அவன் வைத்ததுதான் சட்டமாக இருந்தது அலுவலகத்தில். ராஜா அடிக்கடி பெண்களை பணியில் இருந்து நீக்குவது மீண்டும் புது பெண்களை பணிக்கு எடுப்பது என்று தன் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று ராஜாவின் அம்மாவுக்கு உடல்நிலை மோசமானது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பார்க்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உடல் நிலை மிக மோசமாக சென்று உயிர் பிரிந்தது. இப்பொழுது ராஜாவுக்கு இருந்த ஒரு துணையும் கைநழுவி போனது. தனித்து விடப்பட்ட தனிமரமாக வளம் வந்தான். சில தினங்கள் அம்மாவின் துக்கம் இருந்தன அதன் பிறகும் அவன் வேலைகளை காட்ட ஆரம்பித்துவிட்டான். ராஜாவுக்கு அவரது நிறுவனத்தில் இருந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு கொடுத்தது. அதன்படி சில தினங்களில் வெளிநாட்டு சென்றான் ஆனால் வெளிநாட்டில் அவன் சபல புத்தியை காண்பித்தான். வெளிநாடு சென்றதால் அவனிடம் அதிக பணம் புழக்கம் அதிகம் இருந்தது. வெளிநாட்டு வெளி சில தினங்களில் முடிந்து மீண்டும் ஊருக்கு வந்து சேர்ந்தான். அவன் அலுவலகம் வர ஆரம்பித்தான் எப்பொழுது பெண்களை மட்டும் தொந்தரவு செய்பவன் சமீப காலமாக தான் சொல்வதை கேட்காத ஆண் நபர்களையும் பழிவாங்க ஆரம்பித்தான். தன் அதிகாரத்தால் பலரை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பினான். ஆனால் ராஜாவுக்கு சாபம் மேல் சாபம் வந்து சேர்ந்தது. ஆனால் ராஜா முழு அதிகாரத் திமிரில் இருந்ததால் அவருக்கு அவைகள் பெரிதாக தெரியவில்லை. அவன் பணி செய்து வரும் நிறுவனம் விற்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். பேச்சுவார்த்தை சுமுகமாக முடித்து நல்ல விலைக்கு நிறுவனம் வேறு ஒருவருக்கு கைமாறியது. கை மாறியவுடன் புதிய நிர்வாகம் புதிய ஆட்களை பணிக்கு அமர்த்துவது. புதிதாக வந்த நிர்வாகத்தின் முக்கிய புள்ளிகள் ராஜாவின் செயல்பாட்டை ஆதாரத்துடன் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர் அவர்கள் சமர்ப்பித்த ஆதாரங்களின் விசாரணையின் பேரில் ராஜா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. நிர்வாகம் ராஜாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக ராஜா குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்ட வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பினார். வயது அதிகம் ஆகிவிட்டது வேலை கிடைக்காமல் தடுமாறினான். அதே சமயத்தில் அவரது பெண் மோகம் குறையவில்லை. தன் கையில் இருந்த பணத்தை வைத்துக் கொண்டு பல பெண்களிடம் பாலியல் உறவு கொண்டான். தவறான வழியில் சென்றதால் பணம் அனைத்தும் தண்ணீராக கரைந்தது. பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. பல ஆண்டுகள் சேமித்த PF பணத்தை எடுக்க விண்ணப்பித்து அந்த பணத்தையும் முழுமையாக கேட்டு விளையாட ஆரம்பித்தான். அந்த பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அளித்துக்கொண்டிருந்தாள். அவரது உடல் மிகவும் மெலிந்து. சில நேரங்களில் மயக்கம் வருவதை உணர்ந்தேன். தனக்கு ஏற்பட்ட பயத்தில் மருத்துவரிடம் சென்றேன். மருத்துவர் அனைத்து பரிசோதனைகளையும் செய்து விட்டு முடிவை அவனிடம் தெரிவித்தார் உனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. மிகவும் அதிகம் உடலில் பரவி விட்டது இன்னும் சில நாட்களே உன்னால் உயிர் வாழ முடியும் என்றார். ராஜா தான் செய்த பல தவறுகளுக்கு மனிதனால் தண்டிக்க படாவிட்டாலும் பலரது குறிப்பாக பெண்கள் சாபத்தால் தன் மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளான். தவறு செய்பவர்கள் யாரும் ஆண்டவன் பிடியில் இருந்து தப்ப முடியாது. நீ முற்காலத்தில் மாயையால் ஆடும் ஆட்டத்துக்கு இறுதிக்காலத்தில் கர்மா வந்து சேரும் என்பதை 29-Jun-2021 4:46 pm
கண்ணகியும் மாதவியாய்... பெண்ணை தெய்வமாய் வணங்கினாலும் போகமாய் பார்க்கும் படி ஆனது ஏனோ ?... ஆணுக்கு நிகராய் அனைத்தும் செய்திடும் பெண்தனை பேடியாய் பேசும் படி ஆனதும் ஏனோ ???... போராடி போட்டிகளை வென்றிடினும் வேசியாய் வார்க்கும் வன்மமும் ஏனோ ???... கடைமைக்காக கஷ்டம் கொள்ளும் பெண்தனை காமபதுமையாய் கற்பனை கொள்ளும் கயவர்கள் கண் திறப்பது எப்போதோ ???... தன்னில் பாதி பெண் கொண்ட கடவுள் கதை பல பேசினாலும் பெண்ணை பிழை கொள்ளும் நிலை தான் ஏனோ ???... ஆண் வென்றால் திறமை பெண் வென்றால் மகிமை மனதால் மிருகமாயிருக்கும் மதி கெட்டவர்களை மனிதனாய் ஏற்பது எப்படியோ ???.... தன்னை உயர்த்தும் திறன் கொள்ளாத தற்குறிகள் எல்லாம் சேர்த்து செய்யும் சதி தான் இதுவோ ???... தடைகளை தகர்த்து எறியும் சக்தி கொண்ட பெண்ணும் தன்னை தவறாய் பேசாதிருக்க தனி ஒரு தவம் கொள்ள வேண்டுமோ ???... மதி உயர்ந்து மனிதனாய் மாற்றம் கொண்ட மனிதர் தம் மனங்கள் மதி இழந்ததால் இன்று கண்ணகியும் மாதவி தான்.... ஆம் அறிவிலிகள் அவர்தம் பார்வையிலே அனைவரும் மாதவி தான் இன்று ... இவன் மகேஸ்வரன்.கோ ( மகோ) +91-9843812650 கோவை -35 19-Jun-2021 12:59 pm

உன் தோள் சாய
உன் மடி சாய
உன் கை கோர்க்க
உன்னுள் நானாக
என்னுள் நீயாக
எத்தனை எத்தனை ஆசைகள்..
இருப்பினும் ஏனோ..?உன் முகம்
பார்த்து பேசுகையில் வார்த்தை பிதற்றலாய்..
உன் மனம்மென்னும் ஊஞ்சலில் ஆட
காத்திருப்பேன்..என்றென்றும்
உன் காதல் மொழி கூற
உன்னுள் நானாக
என்னுள் நீயாக..!!
‌‌

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
மேலே