நானும் அப்பாவும்

அப்பா வேலையின் காரணமாக வெளிநாடு செல்ல நேர்ந்தது. தன் அன்பு மகள் கண்ணம்மாவை தன் தம்பி வீட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க எண்ணினார் சாமிக்கண்ணு
கதிரவன் தன் முகத்தை மெல்ல சாய்க்க ஆர்பித்தான்."நாங்க தான் எல்லாருக்கும் வடிச்சுக்கொட்டணும்",எல்லாம் நா வாங்கி வந்த வரம்ன்னு முனுமுனுக்கவே சித்தப்பாவும் உள்ளே நுழைந்தார்.நாட்கள் ஓடஓட சித்தியின் வசைபாடுகள் அதிகமாகி கொண்டே போனது கண்ணம்மாவுக்கு.
சித்தியின் வசைபாடுகளால் கண்ணம்மாவை விடுதியில் கொண்டு சேர்த்தார் சித்தப்பா.மாதம் ஒரு முறை வீட்டிலிருந்து சாப்பாடு வரும்.ஆனால், பாப்பா "இன்னைக்கு சித்திட்ட கேட்டேன் டா அவ செஞ்சு தர மாட்டேன்"னு சொல்லி
கடையில் வாங்கிய பார்சலை பிரிக்கும்போது சாப்பிட மனம் வராமல் உள்ளுக்குள் அழுதாள்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொலைப்பேசி அருகிலே அமர்ந்திருப்பாள்.அப்பாவின் அழைப்பு மணி ஒலிக்க ஓடிப் போய் அழுவாள்."எப்பப்பா வருவ நீ"உன்ன பாக்கனும்னு சொல்லும்போதே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அவளது கண்களில்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சென்ற அப்பா அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது வருவதாக சொன்னார். கண்ணம்மாவோ "எங்கப்பா ஊர்ல இருந்து வர்ராரே "என்று ஆனந்த களிப்பில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு சித்தப்பா விடுதிக்கு கண்ணம்மாவை அழைக்க வந்தார்.வீட்டில் இறங்கிய கண்ணம்மா கூட்டமாக இருப்பதைக் கண்டு அப்பா வந்துட்டாருனு ஓடிபோய் பார்த்தாள்.அப்பா இருந்தார். ஆனால் அவள் கண் முன் அன்று பிணமாக.வெளிநாட்டிலிருந்து ஊருக்கு கிளம்பியவர் டிக்கெட் கேன்சல் ன்னு ரூம்க்கு போகும் போது ஒரு விபத்தில் இறந்துவிட்டார்

அப்பா எந்திருப்பா எந்திரிப்பான்னு தேம்பி தேம்பி அழ, நா எட்டாம் வகுப்பு படிக்கும் போது பரோட்டா கேட்டேன். நீ இப்ப இல்லடா இன்னொரு நாள் வாங்கித் தாறேனு சொன்னியேப்பா. நா பிடிவாதமா கேட்டதும் என்னய அடிச்சியேப்பா.என்னய அடிச்சுட்டேனு மூணு மாசமா பேசாம இருந்தனேப்பா.என்கிட்ட பேசு தாயினு கெஞ்சுநியேப்பா.வீம்புக்காரியாய் பேசாம இருந்தேன் அந்த மூணு மாசம்.இப்ப பேச வந்துருக்கேன் எந்திரிப்பான்னு கதறி அழுதவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் இன்னொரு அப்பாவாக சித்தப்பா.!!
அம்மா! அம்மா! என்று தன் பிள்ளைகளின் குரல் கேட்க மீளா நினைவுகளில் இருந்து மீண்டவளாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புன்சிரிப்புடன் உள்ளே சென்றாள் தன் பிள்ளைகளுக்காக..
காலங்கள் ஓடினாலும் அப்பா கூட இருந்தும் மூணு மாசம் பேசாம பிடிவாதமா இருந்தோமெனு ஒரு குற்றஉணர்ச்சி அவளை வாட்டி வதைக்கிறது இன்றும்.
இருக்கும் போது புரியாத அன்பு இல்லாத போது தேடப்படுகிறது.பணம் பெரிதென்று நினைத்தால் வாழ்வின் பல சந்தோசங்கள் இழக்கப்படுகிறது.இதுவே வாழ்வின் யதார்த்தம் போல என்று மனதுக்குள் நினைத்தவளாய் அடுப்பறைக்குள் நுழைந்தாள் கண்ணம்மா.

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (28-Jun-21, 6:45 am)
Tanglish : naanum appavum
பார்வை : 164

மேலே