மாணவ்
புதிதாக பள்ளியில் சேர்ந்த தமிழ் ஆசிரியர். வகுப்பில் நுழைந்தும " வணக்கம் மாணவர்களே" என்றுகூறி தனது பெயரையும் அறிவிக்கிறார். தூய தமிழ்ப் பெயர்.
பின் வருகைப் பதிவிற்காக மாணவ, மாணவிகள் பெயரைக் படிக்கிறார். பெரும்பால மாணவர்கள (இருபாலரையும் குறிக்கும்) "Present Sir" என்றே கூறுகின்றனர். ஒருசிலரே "உள்ளேன் ஐயா" என்கின்றனர்.
ஒரு பையன் பெயரைப் பார்த்ததும் சில நிமிடங்கள் நிறுத்தி "மாணவ்" யார்" என்கிறார். ஒரு பையன் எழுந்து "சார் என் பெயர் தான் மாணவ்.".
தம்பி "சாறும் வேண்டாம். மோரும் வேண்டாம். என்னை ஐயா என்று அழைத்தாலே போதும். உங்கள் தாய்மொழி தமிழ் தானே. ஆங்கில ஆசிரியர் தவிர மற்ற ஆசிரியர்களை ஐயா என்று அழைப்பதே நல்லது. சார் (Sir) ஐயா இரண்டுக்கும் ஒரே பொருள் தான்.
சரி. மாணவ் உன் பெயரை ஏன் சுருக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ஒலிகள் குறைகிறதே..
"சார் என் பெயரே 'மாணவ்' (Manav)தான். சுருக்கப்பட்ட பெயர் அல்ல.
மாணவன் அல்லது மாணவர் என்றிருந்தால் சரி. அ+ன் அல்லது அ+ர் இருக்கவேண்டும்.
" சார் என் பெயர் இந்திப் பெயர். மாணவனும் இல்லை. மாணவரும். இல்லை.. மாணவ் தான் என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர்.
சரி..அந்தப் பெயருக்கு என்ன பொருள் என்று தெரியுமா?
மாணவன் புரியாமல் நிற்கிறான்.
உன் பெயருக்கு என்ன அர்த்தம் என்று உன் பெற்றோர் கூறினார்களா?
அவுங்களுக்கும் என் பேருக்கான அர்த்தம் தெரியாதுங்க சார். என் அப்பா ஹயர் செகண்டரி ஸ்கூலில் தலைமை தமிழ் ஆசிரியர்.
சரி. நல்லது. எனது வணக்கத்தைக் கூறி அவருக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் என்னை வந்து பார்க்கச் சொல். இல்லை என்றால் எனக்கு அவர் அனுமதி கொடுத்தால் நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவரைப் பார்க்கிறேன்.
சரிங்க சார்.
பின்பு தமிழாசிரியர் தங்கச்செல்வன் ஒரு செய்யுளைப் படித்து மாணவர்களுக்கு விளக்கம் சொல்லி செய்யுளின் மையக் கருத்தை நடைமுறை வாழ்க்கையோடாடு ஒப்பிட்டுக்காட்டி பாடத்தை முடிக்கிறார். இடைவேளை மணி அடிக்கிறது..
■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆
தொடரும்