கண்கள் இருண்டால்

கண்கள் இருண்டால் !!!
பக்கம் 12

காலை விடிந்தது. டாக்டர் சரவணன் மருத்துவமனை செல்ல தயாரானார். காரை இயக்க தயாரானபோது வெளியே கவனித்தார் , பாதி கதவு திறக்க முடியாத அளவிற்கு வெளியே விளம்பர பலகைகள், பேனர் வைத்திருந்தார்கள் வீட்டு வாசல் முன்பு வைத்திருந்தார்கள்.

" தலைவர் வாழ்க !!! தலைவர் வாழ்க !!!" என்று எங்கும் தெரியும் வண்ணம் மிகப் பெரிய பேனர் வைத்திருந்தார்கள் கிட்டத்தட்ட அந்த தெருவிலே பத்து பேர்களுக்கும் மேல் இருக்கும்.அந்த பேனரில் ஒன்றுதான் தற்போது டாக்டர் சரவணன் வீட்டின் முன்பும் வைக்கப்பட்டிருந்தது.

அதிருப்தியுடன் வெளியே வந்தார், வெளியே பார்த்தால் அங்கு கட்சிக் கரை வேட்டிகள், பார்த்தாலே ரவுடிகள் என்று கணிக்கக் கூடிய கும்பல்களும் கூட்டம் கூட்டமாக வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

அதில் ஒருவரை அழைத்து இந்த பேனரை கொஞ்சம் எடுங்களேன் காரை வெளியே எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்ல

"அதெல்லாம் முடியாது சார்! இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!! இன்னைக்கு தலைவர் அந்த வழியாதான் வரப்போகிறார். அதனால் வேறு வழியே கிடையாது நீங்க இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள் இரவு எல்லாவற்றையும் எடுத்து விடுகிறோம் என்று குரலை சற்று உயர்த்தி அதிகாரத் தோரணையில் சொல்ல இவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது என டாக்டர் சரவணன் புரிந்துகொண்டு தொலைபேசியை எடுத்து ரித்திக்கை அழைத்தார்.

"ஹலோ ரித்திக் எங்க இருக்கீங்க"

"அபிலோ ஹாஸ்பிடல் லில் இருக்கேன் டாக்டர்"


" ஒகே ரித்திக். டாக்டர் கதிரவனின் காரை எடுத்துக்கிட்டு என் வீட்டு வரை வரமுடியுமா?"

" ஓகே டாக்டர் எதுவும் பிரச்சனையா? உங்க கார் என்ன ஆச்சு?"

"அது ஒன்னும் இல்ல. நான் கதிரவன் கிட்ட சொல்லிடுவேன் நீ அவர் காரை வாங்கிவிட்டு வீட்டுக்கு வா"

சரி டாக்டர் என்று சொல்லி கிளம்ப தயாரானான் ரித்திக்

வெளியே நின்று கொண்டு அந்த பேனர்களை உற்று நோக்கினார் டாக்டர் சரவணன் .
அந்த பேனரில் இருப்பவரை பற்றி டாக்டர் ஒன்றும் அறியாதவர் அல்ல ஒரு காலத்தில் சாதாரண கட்ட பஞ்சாயத்து ரவுடியிசம் ஏன்று ஆரம்பித்த ரங்கா இன்று அரசியல் காட்சிகளையே ஆட்டிப் படைக்கும் அளவிற்கு பணபலத்தையும் ஆள் பலத்திலும் வளர்ந்து நிற்கிறான். அவனை கண்டு அஞ்சும் நிலையிலே ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் உள்ளது அந்த அளவுக்கு பொருளாதார ரீதியில் செல்வாக்கு உள்ள நபர் ரங்கா.

இன்று புதுக் கட்சி ஆரம்பிக்க போகிறான் அதனால்தான் இத்தனை அலப்பறைகள் தெருவெங்கும். நாட்டில் யார் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது என்று மனதில் வருத்தப்பட்டுக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தார் டாக்டர் சரவணன்.

ரங்கா தனது பங்களாவில் இருந்து கட்சி அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தார் இந்த முறை எப்படியும் நாம் ஆட்சியில் உட்கார வேண்டும் எவ்வளவு பணம் இருந்தும் ஏன் நாம் சில விஷயங்களுக்காக இந்த அரசியல்வாதிகள் கிட்ட கையேந்தி நிற்க வேண்டி இருக்கு , நாமே அரசியலுக்கு வந்துவிட்டால் இனி எந்த பிரச்சினையும் இருக்காது என முடிவெடுத்து தான் ரங்கா அந்தப் புதுக் கட்சியை ஆரம்பித்தார். தன் ஒரே மகளை வள்ளியை அழைத்துக் கொண்டு புறப்படத் தயாரானார் ரங்கா.


வழி நெடுகிலும் இருந்த பேனர்களை பார்த்து உள்ளுக்குள்ளே சந்தோஷப்பட்டுக் கொண்டு தன்னை யாராலும் வெல்ல முடியாது என்றும் தனக்குள்ளே தற்பெருமைகொண்டு காட்சிகளை ரசித்துக் கொண்டே ரங்காவின் காரும் அதன்பின் அவர் மகள் வள்ளியின் காரும் முன்னே 20 கார்களும் பின்னே 20 கார்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன கட்சி அலுவலகம் நோக்கி.


ரிதிக் டாக்டர் சரவணன் வீட்டிற்கும் வந்து கொண்டிருந்தான். இந்த முறையாவது டாக்டர் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று அவனுக்கு ஒரு ஆசை . ஏன் என்றால் அவன் இது போன்ற பெரிய பங்களாவை இதற்க்கு முன் உள்ளே சென்று பார்த்ததில்லை.இந்தப் பணக்காரர்கள் எப்படித்தான் இவ்வளவு ஆடம்பரமான இடத்தில் இருக்கிறார்கள் என அவ்வபோது நினைத்துக் கொள்வான். அதனாலே டாக்டர் சரவணன் வீட்டிற்குள் ஒரு முறையாவது செல்லவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.

கிட்டத்தட்ட பல முறை டாக்டர் வீட்டிற்கு வரும் வாய்ப்பு கிடைத்து இருந்தாலும் பெரும்பாலும் வீட்டிற்குள் சென்ற தில்லை. டாக்டர் சரவணன் எதையாவது வீட்டில் சென்று எடுத்து வரச் சொல்வார் இவன் வீட்டிற்கு செல்லும் முன்பே அங்கு வாயிலில் விட்டு காவலர்கள் அந்தப் பொருளோடு நிற்பார்கள் ஆகவே உள்ளே சென்று பார்க்க எந்தவித சந்தர்ப்பமும் இதுவரை அமையவில்லை அதுபோக மிக நெருக்கமாக பழகும் டாக்டர் சரவணன் ஒருமுறைகூட டாக்டரும் வீட்டிற்கு உள்ளே வா என்று அழைத்தது இல்லை.

ஒரு வழியாக ரித்திக் கார் டாக்டர் சரவணன் தெருவை நெருங்கியது இந்த முறையும் வழக்கம்போல வீட்டிற்கு வெளியேவே டாக்டர் நின்று கொண்டிருந்தார் சரவணன் நின்று கொண்டிருந்தார்.

அவன் காரை நிறுத்தியதும் " குட் மார்னிங் டாக்டர் " என்று சொல்லிக்கொண்டு உள்ளே ஏறி அமர்ந்து கொண்டார் டாக்டர் சரவணன்.

டாக்டர் சரவணன் தன்னை டாக்டர் என்று அழைப்பது இதுவே முதல்முறை சற்று புன்னகையோடு நான் என்னைக்குமே உங்களுக்கு
மாணவன் தான் டாக்டர் என்று சொல்ல

" சரி வண்டியை எடு ஆஸ்பத்திரிக்கு போகணும் அல்ரெடி லேட் ஆயிருச்சு" என்று டாக்டர் சரவணன் சொல்ல..

அபில்லோ ஹாஸ்பிட்டல் நோக்கி வண்டி நகர்ந்து கொண்டிருந்தது.

நான் ஹாஸ்பிடல்ல உள்ள டாக்டர் கிட்ட பேசிகிட்டே இன்றில் இருந்து நீ வேலைக்கு சேர்ந்து விடலாம். முதலில் நார்மல் சிகிச்சை பிரிவில் இரு அதுக்கு அப்புறம் உனக்கு நான் மத்த டாக்டரிடம் பேசி குறிப்பிட்ட செக்ஷன் வாங்கித் தாரேன் என்று சொல்ல


"சரிங்க டாக்டர் நீங்க எது செஞ்சாலும் சரிதான்" என சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.


" சரி அப்புறம் என்ன பிளான் வச்சிருக்க வாழ்கையை பற்றி ?" என்று டாக்டர் சரவணன் கேட்க

"இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு வேலை தான் முக்கியம் டாக்டர் அதுக்கப்புறம்தான் மற்றதை பற்றி யோசிக்கணும் " என்று ரித்திக் சொல்ல

"வெரி குட் இந்த மாதிரி ஏதாவது பிளான் பண்ணி தான் வாழ்க்கையே நகர்த்தி செல்ல வேண்டும் சரி எந்த வயதில் கல்யாணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருக்கிறாய்?"

" இப்போதைக்கு அதைப்பற்றி எதுவும் யோசிக்க வில்லை டாக்டர் . அது எல்லாம் அப்போது பார்த்துக்கொள்ளலாம் டாக்டர்"


"ஆமா, நம்ம கல்லூரியில் பவித்ரா என்ற ஒரு பெண் இருக்கிறாள் அவள பத்தி நீ என்ன நினைக்கிறாய்" என்று டாக்டர் சரவணன் கேட்க..

ஒரு நிமிடம் திக்குமுக்கு ஆடிப்போய் சட்டென்று காரின் வேகத்தை குறைத்தான். ஒருவேளை டாக்டர் சரவணனிடம் யாராவது பவித்ரா பற்றி சொல்லியிருப்பார்களா ? என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே சாலையில் சிக்னல் மாற காரை நிறுத்தினான்.

"எதுக்கு கேக்குறீங்க டாக்டர்"

" இல்லை சும்மாதான் கேட்டேன். உனக்குத்தான் படிக்கிற ஸ்டூடண்ட் பற்றி எல்லா விவரமும் தெரியுமே! அதான் கேட்டேன் " என சிறிய புன்னகையோடு டாக்டர் சரவணன் சொன்னார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் ஆடம்பர ஆட்டத்துடன் ரங்காவின் கார்களின் அணிவகுப்பு சாலையைக் கடந்து செல்ல ரங்காவின் மகள் வள்ளியும் பணக்காரர்களுக்கு உரியதான தோரணையுடனும் கம்பீரத்துடனும் காரில் அமர்ந்திருந்தாள்.

ஆம் அவள்தான் ரங்கா தொடங்கவிருக்கும் அந்த புதிய கட்சியின் தலைவியாக அறிவிக்க பட இருக்கிறாள்!!!


கண்கள் திறக்கும் பக்கம் 13 ஆக

கதை : பொ. சசி குமார்
27 .06 .2021

எழுதியவர் : சசி குமார் (27-Jun-21, 5:24 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 212

மேலே