பார்வை ஒன்றே போதும்
உன் மார்பினில் சாய்ந்து
மயக்கம் கொள்ள ஆசையில்லை...
உன் விரல் பிடித்து
கைகோர்த்து நடக்க ஆசையில்லை...
கடலையோடு கலந்துரையாடும்
காதல் மொழிக்கு ஆசையில்லை....
உன் கள்ளமில்லா உள்ளமதனில்
இடமளித்த எனக்கு..
உன் பார்வை ஒன்றே போதும்
எல்லையில்லா இன்பமாய் என்றும்!!