ஆசைகள்
காதல் பண்ணனும் !
பகலைக் கண்ணயர வைத்த
இரவைத் தூங்கச் சொல்லி...
இருளில் ஒளிரும் உன் முகம்
அறையின் ஜன்னல் வழி காண...
தெருவின் ஓரம் காத்து நிற்கும்
ஒரு நாள் தருணம் வேண்டும் !
பத்தா நூறா என போகும்
வேகம் தெரியாமல் ...
வெயிலா மழையா என்ற வெளியின்
காலம் தெரியாமல் ...
இருள் விலகி மீண்டும்
இருள் சூழும் வரை நீளும்
நேரம் தெரியாமல் ...
சுற்றித் திரிய பைக்கில் நீ, எந்தன்
ஓரம் வேண்டும் !
ஆசைப்பட்டது, பின்
கனவில் வந்தது, உன்
கண் கண்ட நொடியில் என்
மனதில் சொன்னது என
அத்தனையும் சொல்லி
ஒன்றையாவது
பெற்றிட வேண்டும் !
கல்லூரியில் உன்னோடு
கலந்து படிக்க...
கடிதங்கள் பலவும்
எழுதிக் கிழிக்க...
கால்கள் நான்கும்
நடந்தே வலிக்க...
காதல் பண்ணனும்
மீண்டும்
காதல் பண்ணனும் !
இவை எல்லாம்
என் நீண்ட நாள்
நிறைவேறா ஆசைகள் !
நிறைவேறப்போகா ஆசைகள்!
- நா முரளிதரன்