விடைபெற்றுப்போகும் நேரம்

விடைபெற்றுப்போகும் நேரம்
விம்மலாய் நீ சொன்ன வார்த்தை
விலகாமல் இன்னும் என்னுள் ...

விலகிப்போனது விதியின் சாபமா ? இல்லை
வினை செய்யுத உறவின் பாவமா?
எதுவென்று விளங்கவில்லை ...

விட்டுச்செல்வாய் என விளங்காமல்
விண்த்தொடும் கற்பனைக்கொண்டேன்...

மீண்டும் கிடைப்பாயா ? எனை
மீளாத்துயரில் இருந்து மீட்பாயா?...

கடந்து போன காலம் எல்லாம்
கடைசிவரை கிட்டாதோ ?...

கவலையெல்லாம் தீர்த்து செல்ல
வாய்ப்பு தான் தராதோ ?...

கண் மூடும் கடைசி காலம் வரை
கலக்கம் தான் தீராதோ?...

கையுக்கு கிடைத்த உன்னை
கைவிட்டு போனதற்கு காலம் எல்லாம்
கண்ணீர் தான் தண்டனையோ ....

காதலே!!! கடைசியாய் ஒரு வாய்ப்பு வராதோ ?
வாஞ்சையாய் எனை அணைத்து போகாதோ ?
வந்திடின் அது வரமாகும் , இல்லாது போனால்
வாழ்வது வீணாகும் ...


இவன்
மகேஸ்வரன். கோ (மகோ )
கோவை -35
+91 -9843812650

எழுதியவர் : மகேஸ்வரன். கோ (மகோ ) (21-Jun-21, 9:44 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 79

மேலே