உழவர்கள் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரட்டும்
வேளாண்மைத்தொழில் விவசாயிகள் பலருக்கும் லாபகரமாக இல்லை
தானியங்களுக்குக் குறைந்தபட்ச மானியம் சரிவர வகுக்கப்படவில்லை
காலநிலை மாற்றம் காரணமாக பருவமழை பற்றாக்குறை தரும் துயரம்
வேளாண்மைப்பொருள்களின் உற்பத்தித்திறன் வீழ்ந்திருக்கும் நிலவரம்
உரங்கள் விலை மிகுதியால் அல்லல்படும் விவசாயிகள் கிராமம் தோறும்
இத்தகைய சூழலில் உழவர்கள் விவசாயிகளின் வயிறு எப்படி பசியாறும்?
மகாராஷ்டிரா பஞ்சாப் ஹரியானாவில் விவசாயிகள் படும் அவல நிலை
வறுமையால் தற்கொலை புரியும் விவசாயி குடும்பத்தின் பரிதாப நிலை
தொழில்மயமாக்கல் தேவையினால் குறைந்துவிட்ட வேளாண்மை நிலம்
விவசாயக்கடனைத் அடைக்க வழியில்லாமல் சரியும் விவசாயிகள் பலம்
இன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கிராமத்து மக்கள் பதினேழு கோடி
இந்த கொடுமைகளுக்கு நல்லதொரு தீர்வு காணவேண்டும் பிரதமர் மோடி
நமக்கு உணவு படைத்திடும் உழவர்பெருமக்களை தினமும் போற்றுவோம்
பொங்கல் திருநாள் விவசாய சமூகத்தின் வளம் பெருக்கிட வாழ்த்துவோம்!