எனையன்றி எதுவுமில்லை
எனையன்றி எதுவுமில்லை
இனி
விட்டுக் கொடுக்க
எனையன்றி எதுவுமில்லை....
எனை விதைத்த
பெற்றோரை
விட்டு விட்டேன்...
உயிரென்றிருந்த
உடன் பிறப்புகளையும்
உதரி விட்டேன்...
நாட்படு நட்பாயிருந்த
தோழமையையும்
தொலைத்தே விட்டேன்...
அன்பு பாராட்டி
அரவணைத்த
அனைத்தோரையும் விட்டு
அகன்று விட்டேன்...
கண் முன்
விரிந்தவை அனைத்தும்
கானல் நீராய்
மாறிய பின்பும்
இனியும்
விட்டுக் கொடுக்க
எனையன்றி வேறில்லை...
-உமா சுரேஷ்