நாளை சந்திபோமா
நாளை சந்திபோமா...
வெறும் கை
வீசி வரும்
வீனா போனவன்
என்னை கோவிக்காதே
உன் ஞாயமான கோபம்
புரிகிறது
எதிர்பார்த்து வந்த
உன்னை ஏமாற்றியது
பெரிய தவறு தான்
கன்னதில் போட்டு
கொள்ளவா...
தோப்பு கரணம் போடவா...
உச்சி வெய்யில்
நேரத்தில்
உன்னிடம்
பேச்சு வார்த்தை
நடத்துவது தவறு தான்
பசியுடன் வந்த உன்னை
பட்டினி போட்ட
என்னை திட்டிவிடு
அல்ல உன் மூக்கால் கொத்திவிடு...
அம்மாவாசைக்கு
மட்டும்
போதும்,போதும்
என்றளவுக்கு
உன் வயிற்றை அடைக்கும்
கூட்டதின் மத்தியில்
தினம், தினம்
மாடியில் சோறு
வைத்த என்னை
மறக்க மாட்டாயே...
ஏதோ
உனக்கு சோறு
வைப்பதால்
பெருச்சாலி வருகிறதாம்
கடகால் கலகலக்குதாம்
அட!
அந்த அவுஸ் ஓனர்
அலப்பறை
தாங்க முடியவில்லை
தினம் வரமாட்டான்
அந்த திருட்டு பயல்
அத்தி பூத்தார் போல்
வந்து அலட்டி கொள்வான்.
இன்று ஒரு நாள்
மட்டும்
என்னை மன்னித்து விடு
நாளை நான் உயிருடன்
இருந்தால்
எனக்கு
போடும் மிச்ச சோற்றில்
உனக்கும் மிச்சம்
பிடித்து
உனக்கு வழக்கம்போல்
சோறு வைப்பேன்
தயவு செய்து
இன்று போய்
நாளை
வாயேன்
கூடி வாழும் தத்துவத்தை
இந்த மனித பதர்களுக்கு
எடுத்து சொன்ன
என் ஆசை காகமே.....
நாளை சந்திபோமா....
- பாலு.