தூக்கம் இருப்பின் இல்லையடா ஏக்கம்
நன்கு தூங்கி எழுந்திடில் இனிய நாள்
தடை பட்ட தூக்கமெனில் கரி நாள்
கனவின்றி தூங்கினால் முக மலர்ச்சி
கனவுகளுன் உறங்கினால் மன கிளர்ச்சி
தொடர்ச்சியாக உறங்கிடில் உற்ச்சாகம்
விட்டு விட்டு தூங்கினால் வாடும் தேகம்
உழைத்து உறங்கினால் ஆழ்ந்த தூக்கம்
வெறுமனே சாப்பிட்டு படுத்தால் துக்கம்
இரவு நல்லுறக்கம் என்றால் கொண்டாட்டம்
வெறுமனே புரண்டு எழுந்தால் திண்டாட்டம்
தினமும் இரவு வேண்டும் அமைதி தூக்கம்
இல்லாமல் போனால் உள்ளத்திலும் தாக்கம்
8மணி தூங்கிடில் 16மணி தெம்பு இருக்கும்
2 மணி தூங்கினால் அலுப்புதான் இருக்கும்
எந்நேரமும் எந்த இடத்திலும் தூங்குபவர்
ஏஸீ மகிழ்ச்சியை ஓசியில் வாங்குபவர்
மதியம் உறங்கி இரவும் உறங்கும் நபர்கள்
கவுளின் அருள் பெற்ற அருமை அன்பர்கள்
ஆனந்த ராம்