காதலில் நனைய விடு

செவ்வானம் எங்கும் உன் முகம்!
செவ்விதழ் இரண்டும் உன் பெயர்!
கண்களில் எங்கும் உன் பிம்பம்!
கனவுகளில் என்றும் உன் ரூபம்!
உன் இதழ்களின் ரேகையில் என் ஆயூளை ஆருடம் பார்க்கிறேன்!
இமயத்தின் குளிர்ச்சியை
உன் பேச்சில் நான் கேட்கிறேன்!
பூக்கள் உன்னை பார்த்து
நாணம் கொள்ளும்!
புன்சிரிப்பு என் உயிரை
தினமும் கொல்லும்!
மழையென எனக்குள் வந்துவிடு!
என் உயிரை கொஞ்சம்
காதலில் நனைய விடு!

எழுதியவர் : சுதாவி (29-Jun-21, 3:48 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 178

மேலே