மகிழ்ந்திருந்த பொழுதுகள்

மகிழ்ந்திருந்த பொழுதுகளை
எல்லாம் நினைத்து நினைத்து
என் நிம்மதி தொலைக்கிறேன் ...

நினைவுகளாய் மாறிப்போன
நிகழ்வுகளால் நித்திரை
தொலைக்கிறேன் ...

நீயின்றி நிலை கொள்ளா
வாழ்க்கை அது நிதமும்
போராட்டமாய் போகிறது ...

அருகில் இருந்த போது
அதிகம் பேசாதிருந்த
அத்தனையும் அடிமனதில்
ஆராரணமாகி அரிக்கிறது...

நினைவுகள் நிழலாய் துரத்த
நின்னுடன் இருந்த தருணங்களை
மறக்க இயலாத மனம் அது
மரணம் வரும் மணித்துளிக்காக
ஏக்கத்துடன் ...

மரணமயேனும் மனம் அறுக்கும்
மலராத என் காதல் நினைவு
அதனை மறந்திட செய்யாதா என ...

இவன்
மகேஸ்வரன்.கோ ( மகோ )
+91-98438 12650
கோவை-35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ ( மகோ ) (29-Jun-21, 2:24 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 248

மேலே