காதல் சொல்வாயா

ஒரு முறை அல்ல!
பல முறை பார்க்கிறாய்!
ஒர கண்ணால்!

கண்ணோடு கண் கலந்து புது வண்ணம் பிறக்குது!
என் ஜீவனுள்!

தொலைவில் இருந்து பார்த்து பார்த்து என் இதயத்தை கொய்கிறாய்!

அருகில் வந்தால் இதழோர புன்னகை பூக்களை என் மேல் கொட்டி விட்டு ஓடுகிறாய்!

போதுமடி உன் விளையாட்டு!
பார்வையாலே என்னை கொல்லாதே!

மின்னலென ஒரு வார்த்தை சொல்லிச்செல்!

என் உயிர் துள்ளிக்குதிக்கும்!

எழுதியவர் : சுதாவி (22-Jun-21, 8:39 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaadhal solvaayaa
பார்வை : 87

மேலே