உறவு

உறவு
அலுவலக கடிகாரத்தில் மாலை ஆறு மணி அடித்தவுடன் சுயநினைவு வந்தவளாய் தன் இருக்கையை விட்டு எழும்பினாள் யமுனா.என்னடி ரொம்ப சோர்வா தெரியுற என்று கேட்ட தோழி ராதாவுடன் 5பி பேருந்துக்காக காத்திருந்தவள் மூன்று மாசம் ஆகுதடி என்று மெதுவாக சொன்னாள்.போன மாசம் பார்த்தப்ப சொல்லவேயில்லை. அப்புறம் எதுக்காக அலையுற என்ட கொடுத்தா நான் போயி வீட்ல கொடுத்துருப்பன்ல என்று ராதா கேட்க இல்லடி மாசத்துல ஒரு நாள் தான் அம்மாவ பார்க்கிறேன் உனக்கே தெரியும் நாலு மணிக்கு ஆபிஸ் முடிஞ்சாலும் வீட்டுக்கு தெரியாம வேலை பார்த்து அம்மாக்கு கொடுக்குறேன்.என்ன பார்த்தா அம்மாவும் நான் சந்தோஷமா இருக்குறதா நினைச்சி சந்தோஷப்பட்டுக்கும் என்றவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.மணி எட்டாகுது இன்னும் அவள காணும் சம்பள நாள் வேற பால்காரனுக்கு இன்னைக்கும் கொடுக்கலனா கத்துவான் எந்த நேரமுனு கட்டிட்டு வந்தானோ அவன் உயிரும் போயி மாசம் இரண்டாகுது ராசி கெட்டவ என்று சிவகாமி அழ ஆரம்பிக்க வீட்டிற்க்குள் நுழைந்தாள் யமுனா.சோர்வாக சென்று சோபாவில் கைப்பையை வைத்துவிட்டு உள்ளே சென்றவுடன்அவளின் அனுமதியின்றி கைப்பையில் காசை எடுத்துக் கொண்டு புருஷனை இழந்தவ இந்தமாதிரி புடவையிலாம் கட்டிக்கிட்டு இனி போக கூடாது என்று அழுத்தமாக சத்தமாக சொல்லிவிட்டு சென்றாள்.வேலைக்கு போயி நாலு காசு சம்பாதிக்க போயி தான் இவள வீட்ல வைச்சிருக்கேன் இல்லன்னா இவள யாரு வைச்சுருப்பாங்க இன்னும் ஒன்னு கரையேறுறவர வச்சுக்க வேண்டிதான்.வயித்துல ஒன்னுவேற பிள்ளை இல்லன்னு ஆஸ்பத்திரி அலைஞ்சவளுக்கு அவன் போனதும் சொல்ற முழுகாம இருக்கன்னு அந்த மேனேஜர் வேற அடிக்கடி போன்ல பேசுறான் புரோமஷன் வேற வந்திருக்கு என்று மாமியார் முடிப்பதற்குள் ஆவேசமாய் வெளியே வந்தவள் இதுக்கு மேலே ஒரு வாா்த்தை பேசாதீங்க எது பேசுனாலும் பொறுத்துப்பேன் இது எங்க காதலுக்கு கிடைத்த மரியாதை.உங்க பையன் எனக்கு விட்டுப் போன துணை.ஆயிரம் கனவுகளோடு இந்த வீட்டுக்குள்ள வந்தேன் ஆனா இதுக்கு மேலே இங்கயிருந்தா அது அந்த பிஞ்சுக்கு செய்ற பாவம் என்றவள் தன் அறைக்குள் சென்று கணவனின் புகைப்படத்தை முத்தமிட்டு கண்ணில் வடிந்த நீரை துடைத்து துணிந்து வெளியேறினாள் வருகின்ற உறவுக்காக.

எழுதியவர் : (22-Jun-21, 6:47 pm)
சேர்த்தது : Sujitha 92
Tanglish : uravu
பார்வை : 36

மேலே