கிருத்திகா ஆனந்தி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கிருத்திகா ஆனந்தி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  15-Jul-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Apr-2018
பார்த்தவர்கள்:  197
புள்ளி:  10

என்னைப் பற்றி...

வணக்கம் நண்பர்களே... நான் குறும்படங்களில் மற்றும் படங்களில் நடித்து வருகிறேன். கலைத்துறையில் ஆர்வமுள்ளவள். என் பதிவுகளை வாசித்து தங்களது உயர்ந்த கருத்தினையும் ஆலோசனைகளையும் எனக்கு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி நண்பர்களே.

என் படைப்புகள்
கிருத்திகா ஆனந்தி செய்திகள்
கிருத்திகா ஆனந்தி அளித்த படைப்பில் (public) ALAAli மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Apr-2018 12:41 pm

அனுதினமும் அழைந்த தெருவில்
ஆதரவற்று நின்றேன்
இரவு வேகம் கொண்டு
என் உடைமைகளை உருவியபோது.

சில வீடுகளும் இருந்தும்
அதில் மாந்தர்களும் வசித்தும்
யாருக்கு யாரும் நண்பரில்லை.
பேசிப்பழகி கண்டதில்லை.
தெரு வாடியது..
என் அண்டை மனிதர்கள்
சுவாசமின்றி!

கண்களில் நீர் தழும்பியது.
என் தாயின் நினைவான
தங்கச் சங்கிளி.
எனது அன்றைய பிறந்த நாளுக்கு
மொபைல்.
அன்னை இல்லாத எனக்கு
அன்னையாய் உருவெடுத்த
அப்பாவின் அன்றைய அன்பு பரிசு.
என் அப்பாவிற்காக
நான் ஆசையாய் வாங்கிய கேக்.
என் காதலன் பரிசளித்த
மோதிரம்.
தன் காதலைக் கூறிய
என் உயிருக்கும் மேலான
என்னவனின் காகிதம்.

மீட்க முயன்றேன்
கால்

மேலும்

இயல்பான உணர்வுகளை அழகிய தமிழ் மொழியில் கவிதை சமைத்திருக்கின்றீர்.. தொடர்ந்து எழுதுங்கள் 02-Jun-2018 2:03 pm
மிகவும் வலியுடன் படித்த கவிதை... எதார்த்தம் கண் முன்னே.. தோழி... வாழ்த்துக்கள் 22-Apr-2018 12:34 pm
இக் கவிதை தாமதமாக என் கண்களுக்கு எட்டியதையிட்டு மிகவும் கவலை படுகிறேன் ... உங்களது வசனக் கையாடல் கவிதையின் பொருள் அடக்கம் கூறு திறன் இலக்கு வழி எத்திப்பு மிகவும் அற்புதம் ....நமது சமுதாயத்தில் இன்று பெண்கள் எதிர் கொள்ளும் மிகவும் பாரிய அவல நிலையை ஒப்புவித்திருத்திருக்கிறீர்கள்.. வெற்றியும் கொண்டிருக்கிறீர்கள் இன்னும் என் கண்கள் பணிக்கின்றன .. வாழ்த்துக்கள் , இவ்வாறு நிறைய எழுதுங்கள் 19-Apr-2018 2:36 pm
பூக்களையே கோடரி கொண்டு கழுத்தறுக்கும் உலகில் உயிரின் விலைகள் கூட அந்த சிலுவையை விடவும் மலிந்து விட்டது என்று தான் சொல்லத் தோன்றுகின்றது. பெண்ணாக பிறப்பது இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். சத்தியமாக நானும் அதையே தான் இப்போதும் சொல்கிறேன். இங்கே நல்லவர்களை விட கெட்டவர்கள் தான் அதிகம்; ஒரு வேளை இன்று கெட்டவர்கள் எல்லோரும் இறைவனால் கொல்லப்பட்ட பின் நாளை எஞ்சியுள்ள நல்லவர்கள் கூட்டத்தில் கூட கடந்து போனவர்கள் உருவாக முடியும். ஏனென்றால் நாம் மனிதப் படைப்பு. பெண் என்றால் எப்போதும் நாக்குகள் சொல்லும் அந்த இரண்டு வார்த்தைகளைத்தான் உலகம் எப்போதும் வன்முறையால் ஆள்கிறது. அடுத்தவன் கஷ்டத்தை புரிந்து கொள்ள உள்ளம் கிடையாது;ஆனால், அடுத்தவனை காயப்படுத்தும் உள்ளம் நிறைந்து போய்க் கிடக்கிறது. தாய் தந்தை இருப்பில் பெண்கள் நலமாக வாழ்வதே மேல் என்று படுகிறது. ஒரு புறம் கற்பழிப்பு மறுபுறம் கருக்கலைப்பு இன்னும் விவாகரத்து வாழாவெட்டி விதவை இது போல் இன்னும் பல பெண்களையே நாடி வந்து கொண்டிருக்கும் பலியாட்டின் வார்த்தைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Apr-2018 2:32 am
கிருத்திகா ஆனந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்

சகி அளித்த படைப்பில் (public) Saki5a6c33f149e51 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Apr-2018 6:14 pm

உச்சி முகர்ந்து
நெற்றியில் பதியும் இதழின்
எச்சில்கள் சொல்லும்
தாயுக்கும் சேயுக்குமான
காதலை .

முகமென்றோ , மூக்கென்றோ,
கண்ணென்றொ , காதென்றோ,
என்னென்று தெரியாமல் ,
மொட்டுக்கள் உதிர்த்த
முத்தத்தில் புரியும்
சேயன்பு.

கண்ணங்கள் இணைத்து
காதோரம் ஒலிக்கும்
இதழின் இச் சத்தம் சொல்லும்
எச்சில் படா,
நட்பின் உறவை .

இதழ்களில் இணைந்து,
எங்கெங்கோ படர்ந்து,
எண்ணிலடங்கா தொடர்ந்து,
ஜல் ,ஜல் ஒலிகள் சொல்லும்
காதல் பொழிந்த காமம் .
இதுமட்டும் அந்தரங்கம் ,

முன்சொன்ன மூன்றுக்கும்
ஏது அரங்கம் .

மேலும்

Nandri thozha, vazthukkal. 10-Apr-2018 10:35 pm
nandri thozhi 10-Apr-2018 10:33 pm
சேயன்பு குறித்த வரிகள் அருமை தோழி...வியந்தேன்.. 10-Apr-2018 7:31 pm
ஆஹா!...முத்தத்தைப்பற்றிய கவிதை தித்தித்தது . கவிதையின் முடிவு மிக அருமை.இத்தலைப்பில் நானும் நானும் ஒரு கவிதை எழுதியிருந்தேன் முன்பு.வாழ்த்துக்கள் சகி. 10-Apr-2018 6:44 pm
கிருத்திகா ஆனந்தி அளித்த படைப்பில் (public) prasanth 7 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2018 2:06 pm

மனசெல்லாம் திரைப்படத்தில் நீ தூங்கும் நேரத்தில் பாடல் மெட்டுக்கேற்ப வரிகளை நான் புதிதாக அமைத்துள்ளேன். காதல் நிராகரிக்கப் பட்ட பெண்ணின் ஏக்கமே இவ்வரிகள்.....

பல்லவி

என் காதல் ஆழம் என்ன?
உன் உள்ளம் அறியாது
என்னவனே என் மன்னவனே.
உன் நிழலின் துணையாக
நிழலாகத் தொடர்ந்து வர
கூடாதா? காதல் கூடாதா?
உன் மனதில் என் நினைவை
விட்டுச் செல்ல நினைத்துவிட்டேன்
வானத்தில் மின்னப்போகிறேனே.. நானே!

சரணம்- 1

உன் இதழில் நான் பதித்த
முத்தங்கள் சுவடின்றிப் போய்விடுமா?
கை கோர்த்து நாம் நடக்கும் நாட்கள்
இனிமேல் தோன்றிடுமா?
உன் சிரிப்பில் நான் நிறைய
மீண்டும் ஒரு ஜென்மம் எடுப்பேனே
அன்றும் நீ எனை மற

மேலும்

அழகு! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 3:08 pm
இப்பாடல் வரிகள் மிகஅருமை.நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.தங்களது பாடல் வரிகளை காணும்போது எனக்கு தோன்றுவது இதுதான்.தங்களுக்கு எதுகை மோனை இயல்பாக அமைகிறது அதை அழகாகவும் பயன்படுத்துகிறீர் வாழ்த்துக்கள் தொடர்ந்து படைப்புக்கள் படைக்க.நன்றி 11-Apr-2018 12:03 am
தங்கள் பதிலில் நெகிழ்ந்தேன் சகோதரி இன்னும் எழுதுங்கள் நல்லதை எழுதுங்கள் கவிதைக்கு அழகு நல்ல கருத்துக்கள் 10-Apr-2018 10:49 am
நன்றி தோழரே. 10-Apr-2018 10:04 am
ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2018 6:08 pm

ராசி பார்த்து
பொருத்தம் பார்த்து
காலம் பார்த்து
நாள் பார்த்து
நேரம் பார்த்து
மண்டபம் பார்த்து
ஆசிகள் கோர்த்து
கூட்டம் வியர்த்து
திருமணம் நடந்தது
நானிலம் வியக்க...
எதுவும் பார்க்காமல்
மண்டபம் பின்னே
எச்சில் இலைமேலே
நடந்தது திருமணம்
நாய் ஒன்றுக்கும்
நான்கு நாய்களுக்கும்...
நாட்கள் போயின.
நான்கு குட்டிகளுக்கு
தாயானாள் பைரவி.
மண்டப மாப்பிள்ளை
மடித்துகட்டிய லுங்கியில்
கையில் டெஸ்ட் ட்யூபுடன்
ஆஸ்பத்திரி வராண்டாவில்

நர்ஸை வெறித்தபடி..
சிசுவரம் வேண்டி...

மேலும்

மனத்தில் உண்டு...நினைவில் கொண்டு வர முயற்சி செய்கிறேன்... சிறுகதை தொகுப்பில் படித்த ஞாபகம்... 09-Apr-2018 9:24 pm
ஜெய காந்தன் நிறையவே படித்திருக்கிறேன் . இது எந்தக் கதை சொல்லுங்கள். 09-Apr-2018 9:12 pm
இந்த அவலம் பற்றி ஜெயகாந்தன் கதை நினைவுக்கு வருகிறது 09-Apr-2018 7:36 pm
ராசியும் பார்க்கவில்லை பெரியோர் ஆசியும் இல்லை டும் டும் இல்லை திருமணமும் இல்லை இரவின் இருளில் இருவரும் கலந்தனர் குப்பைத் தொட்டியில் குழந்தை ! 09-Apr-2018 7:16 pm
கிருத்திகா ஆனந்தி - சகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2018 12:27 pm

ஈருயிர் இணைந்து
ஓருயிர் ஆனோம் ...
உன்னில் தொலைத்த
என்யுயிர் எங்கே ? ...
இரண்டாம் உயிராய்
உனக்குள் அங்கே ,..

மேலும்

நன்றி 09-Apr-2018 3:44 pm
அருமை 09-Apr-2018 12:50 pm
கிருத்திகா ஆனந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2018 3:15 pm

அழகே!
பனித்துளி உன்
பாதத்தில் பதுங்கிட
வரம் கேட்கிறது!
பூவிலுள்ள தேனில்
நீ நீராட வேண்டுமென
வண்டுக்கும் ஆசை!
உன் புன்னகையில்
பூமியே புத்துணர்ச்சி
பெறுகிறது!
நம் காதலின் இடைவெளி
இரு விரல்களுக்குள்ள
இடைவெளி தான்!
இறக்காமல்
மறையாத காதல்!
உன் கருவிழியால்
என் இதழ்களை
கருக்கிவிடாதே!
பனித்தீவே உன்
காதலில் பல முறை
நான் சறுக்கிவிடப்படுகிறேன்!
இறைவனை
என்னென்று கூற?
என் உயிருக்கு காதல்
உரம் போட உனை
படைத்துவிட்டானா?
அல்லது உன் காதல்
உரத்துக்கு உயிரூட்ட
என்னை படைத்தானா?
சட்டென கோபம்
கொள்ளும் நெஞ்சமும்
கடிந்துகொள்ளும் புத்தியும்
உன்னால் ஆட்கொள்ளப

மேலும்

அழகு ! அருமை! அற்புதம்! மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 3:11 pm
தங்களின் இக்கவி மிக அழகு வாழ்த்துக்கள் 11-Apr-2018 12:06 am
கரைகள் உள்ள போது அலைகளின் பெறுமதி கண்களில் இதமாகிறது. அது போல தான் நாம் வாழும் வாழ்க்கையில் காதல் என்பதும். நேர்மையான உள்ளங்கள் சேரும் போது காரணமே இன்றி சிந்தப்படும் கண்ணீர்த்துளிகள் தான் உள்ளங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுகின்றது. விரைவாக உருவாகி அதை விட விரைவாக முடிந்து போவது காதல் கிடையாது. அதற்கு வேறு பெயர். காதல் என்பது மரணம் வரை நிலைத்திருக்க வேண்டும் கடைசியில் மரணத்தில் கூட காதல் மீதமிருக்க வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Apr-2018 6:57 pm
"பனித்தீவே உன் காதலில் பல முறை நான் சருக்கிவிடப்படுகிறேன்! இந்த வரிகளில் "சருக்கியை சறுக்கியாக மாற்றுங்கள் ..அவசரப் பிழை என நினைக்கிறேன் ..அழகான வரிகள் வித்தியாசமான அணுகு முறை வாழ்த்துக்கள் 09-Apr-2018 6:26 pm
கிருத்திகா ஆனந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2018 2:06 pm

மனசெல்லாம் திரைப்படத்தில் நீ தூங்கும் நேரத்தில் பாடல் மெட்டுக்கேற்ப வரிகளை நான் புதிதாக அமைத்துள்ளேன். காதல் நிராகரிக்கப் பட்ட பெண்ணின் ஏக்கமே இவ்வரிகள்.....

பல்லவி

என் காதல் ஆழம் என்ன?
உன் உள்ளம் அறியாது
என்னவனே என் மன்னவனே.
உன் நிழலின் துணையாக
நிழலாகத் தொடர்ந்து வர
கூடாதா? காதல் கூடாதா?
உன் மனதில் என் நினைவை
விட்டுச் செல்ல நினைத்துவிட்டேன்
வானத்தில் மின்னப்போகிறேனே.. நானே!

சரணம்- 1

உன் இதழில் நான் பதித்த
முத்தங்கள் சுவடின்றிப் போய்விடுமா?
கை கோர்த்து நாம் நடக்கும் நாட்கள்
இனிமேல் தோன்றிடுமா?
உன் சிரிப்பில் நான் நிறைய
மீண்டும் ஒரு ஜென்மம் எடுப்பேனே
அன்றும் நீ எனை மற

மேலும்

அழகு! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2018 3:08 pm
இப்பாடல் வரிகள் மிகஅருமை.நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.தங்களது பாடல் வரிகளை காணும்போது எனக்கு தோன்றுவது இதுதான்.தங்களுக்கு எதுகை மோனை இயல்பாக அமைகிறது அதை அழகாகவும் பயன்படுத்துகிறீர் வாழ்த்துக்கள் தொடர்ந்து படைப்புக்கள் படைக்க.நன்றி 11-Apr-2018 12:03 am
தங்கள் பதிலில் நெகிழ்ந்தேன் சகோதரி இன்னும் எழுதுங்கள் நல்லதை எழுதுங்கள் கவிதைக்கு அழகு நல்ல கருத்துக்கள் 10-Apr-2018 10:49 am
நன்றி தோழரே. 10-Apr-2018 10:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
வினோ

வினோ

துபாய்
செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (21)

இவரை பின்தொடர்பவர்கள் (24)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே