டும் டும் டும்
ராசி பார்த்து
பொருத்தம் பார்த்து
காலம் பார்த்து
நாள் பார்த்து
நேரம் பார்த்து
மண்டபம் பார்த்து
ஆசிகள் கோர்த்து
கூட்டம் வியர்த்து
திருமணம் நடந்தது
நானிலம் வியக்க...
எதுவும் பார்க்காமல்
மண்டபம் பின்னே
எச்சில் இலைமேலே
நடந்தது திருமணம்
நாய் ஒன்றுக்கும்
நான்கு நாய்களுக்கும்...
நாட்கள் போயின.
நான்கு குட்டிகளுக்கு
தாயானாள் பைரவி.
மண்டப மாப்பிள்ளை
மடித்துகட்டிய லுங்கியில்
கையில் டெஸ்ட் ட்யூபுடன்
ஆஸ்பத்திரி வராண்டாவில்
நர்ஸை வெறித்தபடி..
சிசுவரம் வேண்டி...