உன்னை உண்ணும் உலகம்

பொழுதுபோக்கலாம்
நன்கு...மிக நன்றாக...
சிலர்
சில பார்ப்பதால்.
சிலர்
சில நினைப்பதால்.
சிலர்
சில படிப்பதால்.
சிலர்
சில சொல்வதால்.
சிலர்
சில எழுதுவதால்.
சிலர்
சில செய்வதால்.
பொழுதுகள் போகும்.
போகும் பொழுதுகள்
போகவைக்கப்படுபவை...
புலன் அறியா
மனம் அறியா
அறிவு அறியா
வெகு சிலரின்
வெகு நடிப்பில்
வெகு பேச்சில்
வெகு உணர்ச்சியில்
நமக்கும் எனக்கும்
பொழுதுகள் போகும்
நன்கு...மிக நன்கு...
போவது பொழுதல்ல
வாழ்க்கை என்பது
பாவம்...
எப்போது தெரியும்
எதற்கும் வஞ்சனையற்று
வாய் பிளந்து நோக்கும்
வெள்ளந்தி தமிழனுக்கு.

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Apr-18, 6:56 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : unnai unnum ulakam
பார்வை : 65

மேலே