தாலாட்டு

செல்லக்கிளியே என் சினிக்கரும்பே
கண்மூடியே துயில் கொள்ளடி..
விடியும் வேளை விளையாடலாம்
மடியில் சாய்ந்து இமைமூடடி..

காற்றும் வந்து கீதம் பாடும்
நிலவும் உன்னை தால்லாட்டிடும்..
பூக்கள் எல்லாம் வாசம் வீசும்
கண்மணி உறங்க தலையணை கொடுக்கும்..

பாட்டி வந்து கதைகள் சொல்வாள்
தாத்தா அம்பாரை கூட்டி செல்வார்..
அப்பா உன்னை அள்ளி அணைப்பார்
அம்மா என்றும் உன்னருகினில் இருப்பாள்..

கண்கள் அயர்ந்து தூக்கம் வருமே
அழகான கனவுகள் தோன்றிடுமே..
ஆராரிரோ ஆரிகிறாரோ..
தானானனே தன்னன்னானே..

எழுதியவர் : Vennilah (9-Apr-18, 11:47 pm)
Tanglish : thaalaattu
பார்வை : 1886

மேலே