என்றென்றும் காதல் நீதானே

மனசெல்லாம் திரைப்படத்தில் நீ தூங்கும் நேரத்தில் பாடல் மெட்டுக்கேற்ப வரிகளை நான் புதிதாக அமைத்துள்ளேன். காதல் நிராகரிக்கப் பட்ட பெண்ணின் ஏக்கமே இவ்வரிகள்.....

பல்லவி

என் காதல் ஆழம் என்ன?
உன் உள்ளம் அறியாது
என்னவனே என் மன்னவனே.
உன் நிழலின் துணையாக
நிழலாகத் தொடர்ந்து வர
கூடாதா? காதல் கூடாதா?
உன் மனதில் என் நினைவை
விட்டுச் செல்ல நினைத்துவிட்டேன்
வானத்தில் மின்னப்போகிறேனே.. நானே!

சரணம்- 1

உன் இதழில் நான் பதித்த
முத்தங்கள் சுவடின்றிப் போய்விடுமா?
கை கோர்த்து நாம் நடக்கும் நாட்கள்
இனிமேல் தோன்றிடுமா?
உன் சிரிப்பில் நான் நிறைய
மீண்டும் ஒரு ஜென்மம் எடுப்பேனே
அன்றும் நீ எனை மறுத்தால்
உயிரை நான் விடுவேனே
என் காதல் என்றும் நீதானே!

என் காதல் ஆழம் என்ன?
உன் உள்ளம் அறியாது
என்னவனே என் மன்னவனே.
உன் நிழலின் துணையாக
நிழலாகத் தொடர்ந்து வர
கூடாதா? காதல் கூடாதா?


சரணம்- 2

என் உயிரை மாய்த்தப் பின்பு
உன் உரிமை நான் ஆவேனே
உன் ஏக்கம் அதைப் போக்க
உணர்வால் என்றும் உன்னை அனைப்பேனே!
இருதயத்தில் உள்ள வலி
உயிரை வெளியேற்ற துடிக்குதடா
நான் போகும் உலகத்தில்
வலி ஏதும் கிடையாது
உன் காதல் தந்த வலி போல!



என் காதல் ஆழம் என்ன?
உன் உள்ளம் அறியாது
என்னவனே என் மன்னவனே.
உன் நிழலின் துணையாக
நிழலாகத் தொடர்ந்து வர
கூடாதா? காதல் கூடாதா?
உன் மனதில் என் நினைவை
விட்டுச் செல்ல நினைத்துவிட்டேன்
வானத்தில் மின்னப்போகிறேனே.. நானே!
என் காதல் ஆழம் என்ன?
உன் உள்ளம் அறியாது
என்னவனே என் மன்னவனே.
என்னவனே என் மன்னவனே.
மன்னவனே என் மன்னவனே!

எழுதியவர் : கிருத்திகா ஆனந்தி (9-Apr-18, 2:06 pm)
பார்வை : 351

மேலே