அத்திப் பூ

அந்தப் பாறையிலும்
அன்று நீர் கசிந்தது
என் மனதில் அது வந்து
அருவியாய்க் கொட்டியது,
என்றும் இறுகி இருக்கும்
அவள் முகத்தில் அன்று
என் முகம் கண்டதும்
எதிர்பாரா புன்முறுவல்
இந்த அத்தி பூத்தது போல்,
அந்தப் புன்னகை பறவை
சிறகடித்து என்னிடம்
ஓடோடி வந்து
என் மனத்தை அவளிடம்
அப்படியே கொத்திக்
கொண்டு சென்றது!
ஆக்கம்
அஷ்ரப் அலி