உண்மைக் காதலன்

அழகே!
பனித்துளி உன்
பாதத்தில் பதுங்கிட
வரம் கேட்கிறது!
பூவிலுள்ள தேனில்
நீ நீராட வேண்டுமென
வண்டுக்கும் ஆசை!
உன் புன்னகையில்
பூமியே புத்துணர்ச்சி
பெறுகிறது!
நம் காதலின் இடைவெளி
இரு விரல்களுக்குள்ள
இடைவெளி தான்!
இறக்காமல்
மறையாத காதல்!
உன் கருவிழியால்
என் இதழ்களை
கருக்கிவிடாதே!
பனித்தீவே உன்
காதலில் பல முறை
நான் சறுக்கிவிடப்படுகிறேன்!
இறைவனை
என்னென்று கூற?
என் உயிருக்கு காதல்
உரம் போட உனை
படைத்துவிட்டானா?
அல்லது உன் காதல்
உரத்துக்கு உயிரூட்ட
என்னை படைத்தானா?
சட்டென கோபம்
கொள்ளும் நெஞ்சமும்
கடிந்துகொள்ளும் புத்தியும்
உன்னால் ஆட்கொள்ளப்பட்ட
புத்தனாய் போனது ஏன்?
அன்றொரு புத்தன்
இறைவனால் ஆட்கொள்ளப்பட்டான்!
இன்றோ நான் என் கடவுளான
உன்னால் ஆட்கொள்ளப்படுகிறேன்!
நான் இறையாகிறேன்!
உன் காதலுக்கு இரையாகிறேன்!
இறைவா!
நான் என் காதலில்
அலைந்து திரிந்து
நிறைந்து கலந்து
கரையேறிவிட்டேன்!
காதல் கரையில்
இன்று கரைந்துவிட்டேன்
என் காதலிக்கு சிலை
வைத்துவிட்டேன்!
ஆம்.. என் உயிரால்
மட்டும் ஆன சிலை
என் வாழ்க்கையில்
நட்சத்திர புள்ளியாய்
மின்னுகிறாய்!
காதலின் பைத்தியம் நான்!
காதலின் கடவுள் நான்!
பொய்க்காதலின் சாத்தானும் நான்!
காதலின் ஒரே உருவம்
நானே! அந்த உண்மைக்காதலன்!
காதலின் வலிமை
மிக்கவன் நானே! நானே!

எழுதியவர் : கிருத்திகா ஆனந்தி (9-Apr-18, 3:15 pm)
Tanglish : unmaik kaadhalan
பார்வை : 171

மேலே