முரண்பட்ட முத்தங்கள்

உச்சி முகர்ந்து
நெற்றியில் பதியும் இதழின்
எச்சில்கள் சொல்லும்
தாயுக்கும் சேயுக்குமான
காதலை .

முகமென்றோ , மூக்கென்றோ,
கண்ணென்றொ , காதென்றோ,
என்னென்று தெரியாமல் ,
மொட்டுக்கள் உதிர்த்த
முத்தத்தில் புரியும்
சேயன்பு.

கண்ணங்கள் இணைத்து
காதோரம் ஒலிக்கும்
இதழின் இச் சத்தம் சொல்லும்
எச்சில் படா,
நட்பின் உறவை .

இதழ்களில் இணைந்து,
எங்கெங்கோ படர்ந்து,
எண்ணிலடங்கா தொடர்ந்து,
ஜல் ,ஜல் ஒலிகள் சொல்லும்
காதல் பொழிந்த காமம் .
இதுமட்டும் அந்தரங்கம் ,

முன்சொன்ன மூன்றுக்கும்
ஏது அரங்கம் .

எழுதியவர் : (10-Apr-18, 6:14 pm)
பார்வை : 67

மேலே