நிலவு நாவலாசிரியை
இந்த நிலவுக்கு
இதற்கு முன்
எத்தனை மாலைகள்
எத்தனை இரவுகள்
எத்தனை உறவுகள்
கடந்து விட்டன ....
இன்று ஒரு புதிய மாலை
ஒரு புதிய அத்தியாயத்தின்
ஆரம்ப வரியினை எழுதத் துவங்கியிருக்கிறாள்
வானத்து மேசையில்
நிலவுக் கவிஞை கதாசிரியை நாவலாசிரியை
உன்னையும் என்னையும் பற்றித்தான்....
அங்கே பார் ! புன்னகையுடன் நம்மை திரும்பிப் பார்க்கிறாள் !