உறக்கமற்று தவிக்கிறது
வெண்ணிலவும் உறங்கி போனது!
விண்மீனும் தூரமும் போனது!
தென்றல் வந்து பேசவில்லை!
தேகம் இன்று குளிரவில்லை!
இருளின் இருட்டில் இதயம் மிதக்குது!
துடிக்கும் இமைக்குள் உன் பிம்பம் மலருது!
இரவும் மொட்டவிழ்ந்தது!
விழிகள் மட்டும் உன்னை எண்ணி உறக்கமற்று தவிக்கிறது!
என்னவளே!