என் அப்பா

எனது வாழ்வின் முதல்
கதாநாயகன்!

அவர் அறியா விசயம் ஏதுமில்லை என்றிருந்தேன்!

பிஞ்சு குழந்தை எனை கொஞ்சி வளர்த்தவர்!

வெயில்பட்டு கருத்துவிடுவேனோ என விழியில் வைத்து வளர்த்தவர்!

ஊரை கண்டு ரசித்திட தலையில் அமர்த்தி ஆனந்தம் கொண்டவர்!

நான் வளர வளர எதிரியாய் தெரிந்தவர்!

வசை பல பொழிந்தாலும் நெஞ்சுக்குள் வாசம் செய்தவர்!

அடித்து கண்டித்தாலும் அன்பை மனசுக்குள் மறைத்து வைத்தவர்!

கண்களில் நீர் வடியாமல் எனை மகிழ வைத்து பார்த்தவர்!

என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஓளி விளக்கு அவர்!

பட்டபடிப்பு படித்தவனுக்கு வாழ்க்கை பாடம் சொல்லி தந்தவர்!

இன்று நீங்கள் இல்லையென்றாலும் என் நெஞ்சுகுள் தெய்வமாய் வாசம் செய்பவர்!

எழுதியவர் : சுதாவி (20-Jun-21, 8:59 am)
சேர்த்தது : சுதாவி
Tanglish : en appa
பார்வை : 77

மேலே