மௌனமாய் என்னிடம் என்னென்னவோ சொல்லவிழைகிறாய்
மௌன விழிகளில் மலர்களை நினைவு படுத்துகிறாய்
மௌன இதழ்களில் மலர்விரியும் அழகைக் காட்டுகிறாய்
மௌனமாய் இதழ்களைத் திறந்து முத்துக்களை பரிசாய்அளித்து
மௌனமாய் என்னிடம் ஏதேதோ என்னென்னவோ சொல்லவிழைகிறாய்
-----இயல்புப்பா
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாப்பு விழைவோருக்கு விளக்கம் :
---அவலோகிதம் இதை ஐந்து சீர் கொண்ட நெடியடிகளால் ஒரே எதுகையுடன் அமைந்த
கலித்துறையாகக் காட்டுகிறது ஏற்போம் .
மௌன விழிகளில் மலர்களை நினைவு
மௌன இதழ்களில் மலர்விரியும் அழகு
மௌனமாய் இதழ்தரும் முத்துப்பரிசுடன்
மௌனமாய் என்னிடம் என்னென்னவோ சொல்கிறாய்
----இது நேரிசை ஆசிரியப்பா என்கிறது
ஏன் என்று ஆராய்வோம்
நாலு சீர்கள் கொண்ட அளவடியுடன் கடைசி அடிக்கு முந்திய அடி மூன்று சீர்களால்
அமைந்ந்ததால் (மௌனமாய் இதழ்தரும் முத்துப்பரிசுடன் ) இது நேரிசை ஆசிரியப்பா
ஈரசை ஆசிரியத் தளைகளும் பிற தளைகளும் கலந்தும் வரலாம்
தேமாங்கனி புளிமாங்கனி சீர்களுக்கு இப்பாவில் அனுமதி உண்டு
இங்கே என்/னென்/னவோ--- நேர் நேர் நிரை = தேமாங்கனி
கூவிளங்கனி கருவிளங்கனி சீர்களை ஏற்காது இந்த ஆசிரியப்பா
வெண்பா முற்றிலும் கனிச் சீர்களை ஏற்காது
கனிச்சீர்களை கூடையாய்க் கொண்டு கொட்டினால்தான் வஞ்சிப்பா சிரிப்பாள்