தந்தையர் தினம்
அம்மாவைக் கொஞ்சி அம்மாவே உலகம்
என்று அம்மாவிடம் தம் குறையும்
நிறையும் கூறி நெகிழும் மகிழும்
மக்களே இன்றாவது கொஞ்சம் உங்கள்
அப்பாவையும் கண்டு கொஞ்சி மகிழுங்கள்
அப்பா சிங்கமோ புலியோ அல்ல
உங்கள் அன்பிற்கு கட்டுப் படுபவன்
உங்கள் தந்தையும் கூட என்று
அறிந்திடுவீர் பிள்ளைகளே என்று
தாய் தனிப் பெரும் தெய்வமே
இருந்தும் தந்தை இல்லாது பிள்ளைகள்
ஏது கொஞ்சம் சிந்தியுங்கள் இன்று
தந்தையர் தின மாம்