நினைவுகள்
மின்சாரம் இல்லாத வேளையில் மெழுகுவர்த்தி வெளிச்சமாய் எனக்குள் வந்தவள் நீ!
உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் மனகுளத்தில் தினமும் துள்ளிக்குதிக்கிறது!
பள்ளிமேஜையில் உன்பெயரை காம்பஸ் கொண்டு எழுதி ரசித்த நாட்கள்!
பள்ளிக்காலத்தில் உன் புகைப்படத்தை சட்டைபையில் பத்திரமாய் வைத்திருந்து பார்த்து ரசித்த நாட்கள்!
பள்ளிவாசலில் உன் வருகையை எதிர்பார்த்து பரிதவித்து காத்திருந்த நாட்கள்!
சாலையோர கள்ளிச்செடியில் நம் இருவர் பெயரையும் எழுதி பார்த்த நாட்கள்!
சாமி கும்பிடும் வேளையில் உன் நெற்றில் திலமிட்டு மகிழ்ந்த நாட்கள்!
தூங்கும் வேளையில் என் கனவுக்குள் வந்து கலவரம் செய்ய நாட்கள்!
உன் கூந்தல் சூடிய மலர்கள் வாடிப்போனாலும் வாடாமல் மனம் வீசுதடி உன் ஞாபகப்பூக்கள்!