இளங்காலைக் கதிர்
பூஞ் சோலை
நறுமணம் வீசும்
தென்றல் தழுவிய
அவளது இளங்காலை
மேனியின்
சுந்தரக் கதிர்கள்
என்னுடல் வீசிய
மறுகணமே
என்னைக் கவ்விய
காணா சோகப்பனி
அவ்விடம் நீங்கி
மறைந்தோட
முல்லைச் சரம்
சிதறும் அந்த
முத்தாரப்
புன்னகையில்
என் நினைவும்
நெஞ்சமும்
கள்ளுண்ட
வண்டாகி
அங்கே
போதையில்
கிறங்கி நிற்கும்
அஷ்றப் அலி