அலை பாயும் மனதினிலே

கொஞ்ச நஞ்ச ஆசைகளா
அலை பாயும் மனதினிலே
சில நேரங்களில் சிலர் சில
சமய சந்தர்ப் பங்களுக்காக
காத்துக் காத்து கண்களோப்
பூத்துப் பூத்தும் கைநழுவிடும்


பருவம் வந்ததும் நிலை மாறிட உணர்வுகள் காதல் தீயைமூட்டும்
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு வந்து
அடிவயிற்றில் ஈரத்துணியை கட்டும் 
அலை பாயும் மனதினிலே ஆயிரம்
ஆசைகள் அனுமதிக்கு காத்திருக்கும் 


கண்ணக் கரையோரம் கண்ணீர்
துளி; சுரைப்பிஞ்சு போல் தொங்கி 
காரணத்தைச் சொல்லும்; காதல்
அலை பாயும் மனதினிலே எழுந்த
எண்ணமதில் எண்ணெய் பிழிய
எதிரில் நில்லாது ஒரு எள்ளும்


போராட்டம் துவக்கம் பெரும்
வேம்பென கூறும் வாய் கசக்கும்
கோழி மிதித்து குஞ்சும் முடமாகும்
நேசித்த நட்புக்களும் எடுத்தெரியும்
நம்கால் மிதிபடும் நம் நிழலே கூட
நம்மையே மிதித்துப் பழித்தீர்க்க
அந்த நேரத்திற்கு காத்திருக்கும்


தடைகள் ஆங்காங்கே நுழைந்து
மடைகள் கட்டப்பட நேர்ந்தாலும்
விடைகள் தோல்வியாயிராது 
முடுச்சிகள் சிக்கெடுக் கப்படும்
நடைகள் மாறிடும் தன்னாலே
அன்றே அலை பாயும் மனதினிலே
ஆனந்தம் கடலலைகள் போல்
ஆர்பரித்த வண்ணமாயிருக்கும்


ஆறவிட்டு ஏறக்கட்டி காதலோ
அலை பாயும் மனதினிலே கடல்
மீன்களைப் போல் ஆனந்தம் தாளா
நீரில் நீந்திய காலம் போதுமென
ஆகாயத்தில் நீந்தத் தாவும் காலம்
மிக அருகிலே வெகு தூரமில்லை
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"அலை பாயும் மனதினிலே"
கவிதைமணியில்
மும்பை/ மகாராஷ்டிரம்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (17-May-18, 11:59 am)
பார்வை : 112

மேலே