ஆறுவயதில் நீ ஐந்து வயதில் நான்

விரும்பி வெறுத்து வேக தடையில்_
தடுக்கி எழுந்ததுபோல்

திரும்பி பார்க்க நேரமில்லா
காதல் இங்கு இல்லையடி

திரும்ப திரும்ப பார்த்துவிட்டு
இன்று சலித்ததுபோல்_
சொற்கள் சேர்த்து சொல்லி விட்டான்
நொடிகள் கசக்குத்தடி

ஐந்து வயதில் ஆசைப்பட்ட அம்மிபொம்மை எல்லாம்
அத்தி பூக்கள் உதிர்வதுபோல்
இன்று உதிருதடி

எட்டி பிடித்த மின்மினியை நின்று பார்ப்பதுபோல்
தட்டி விட்டு போன உன்னை
தனிமை விரும்புதடி ❤️


இன்று நாளை காலமெல்லாம்
பூக்கள் பூக்குமடி
அதை பறிக்க நினைக்கும் பட்டுப்பூவே இன்று படியடி !!!


#கிறுக்கி

எழுதியவர் : கண்மணி சீனிவாசன் (17-May-18, 3:17 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 67

மேலே