மனதெல்லாம் வீதிஉலா சென்றேனே
என் மனதெல்லாம் வீதி உலா சென்றேனே
கண்ணில் கண்டவுடன்
ஏனோ நிலை தடுமாறியதே
மனம் சிறகடிக்கவே
பித்து பிடித்ததே
எல்லாம் உன்னை கண்டதனாலோ
புரியாமல் தவிக்கிறேன்
என் எண்ணமெல்லாம் உன்னைச் சூழலவே
நான் எங்கோ ஒரு வீதியில் உலா செல்கிறேன்
எங்கே அந்த வீதி தெரியவில்லை
காற்றில் மிதந்ததே அவ்வீதி
அமைதியிலும் அமைதியாய்
தூய்மையொன்று அங்கு கண்டேனே
மனதினிலே அங்குள்ள சாலையிலே
அஞ்சி நடுநடுங்கி அம்மண்ணில் பாதம் படவே
உன் நினைவு தோன்றுதடி
உன் வீதி என்றவுடன்
தேன் சொட்டும் வீதியோ
பால் போன்ற வெண்ணிற வீதியோ
ஏனோ உன் வீதி கூட மனதை கொள்ளை கொள்ளுதடி
என் கண்மணியே
பவனி வந்தேன்
உன்னைக்காணவே
ஒவ்வொறு வீட்டிலும் நீ உள்ளாயா என்று காண எத்தனை போராட்டமடி
போராட்டத்திலும் கண்டுபிடித்தேனடி
உன்னைக்காணவே உனக்காகவே
வந்தேனே
உன் கைப்பற்ற வந்தேனடி
உன் நினைவுகளை சுமந்து
அப்போது தெரிந்தது
நான் வந்த பாதை கரடுமுரடானதென்று
வலி கூட உணரவில்லை
அதை மனம் கூட சொல்லவில்லை
உன்னால் அது தேன் சொட்டும் பாதையானதே என் கண்ணே