நான் காணும் உலகம் நீயே

ஈர்க்கப்பட்டதோ என் மனம்.....
வெள்ளித்திரைபோலான என்மீது துள்ளியோடிய.....மின்னலின்
உருமாறிய உன் இரு கயல்விழிகளால்(மீன்களை போன்ற கண்களால்)....

மயங்கினேன்..(கனா)
உன் இரு இந்திர வில்லின் கீழான உன் மந்திர கண்களின் , தந்திர வலை விசியபோது
வாடும் கயலாக நானோ கரையில்....

கரையாத உன் காதல் (அன்பு) கடல் அலையாக தொட்டோடியே மூழ்க செய்தாய்....
கார்மேக துளியினை தன்னுள் புதைக்கும் சிப்பிபோல
உன் இதய கூட்டில் ஒளிக்கும் முத்தாக நான்.

எழுதியவர் : ரா . மணிவண்ணன் (17-May-18, 4:18 pm)
பார்வை : 506

மேலே