கண்மணி சீனிவாசன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கண்மணி சீனிவாசன் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 07-Jul-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 512 |
புள்ளி | : 41 |
Eluthu உருவகித்து என் எண்ணங்களை பகிர வாய்பளித்த உள்ளங்களுக்கு நன்றிகள் !!
சிகரம் நோக்கி சீறி எழுந்திடு
சிறந்த உன் நெறியில் ஐயம் கலைந்திடு
நெருப்பதன் வேகம் நெஞ்சில் நிறைத்திடு
நெருங்கிடும் வெற்றி நெற்றித்திலகமாய்
பிறப்பதன் அற்புதம் பெற்ற எழில் மங்கையுன்
பிறந்த அந்நாள் முதல் சீருடன் சிறப்புடன்
தனித்துவம் தாக்கி தரணியில் தழைக்கவே
தருவாய் அருள் மழை இணையிலா இறைவனே
அறியாத தனிமைதனில் கூட்டாக்கி உனை வைத்தான்
புரியாமல் இனிமை என பாட்டாக்கி தனில் பதித்தான்
உன் சினை அறியாதவன் எரித்த கணை நீ ஏன் சீற்றம் கொண்டாய்
தன் உயிர் சுவாசத்துடன் கலந்தவன் மெய்யதனுள் மாற்றம் செய்தாய்
இரு விரலால் உனை ஏந்தி கடைசி வரை அவன் பிடிக்க
ஒரு கரலாம் உறவுதனை சோகமது சீரழிக்க
வைய்யகம் தூற்றும் உனை கையகப்படுத்தி வாழ்ந்த நிலை
கல்லறைக்கு கொண்டு சென்றுவிட்ட கடும் இலைப்புகையே. ......அழிந்துவிடு.......அழிந்துவிடு
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
கற்றதும் கல்லாததும் என் உள்ளங்கை மேலளவு
மேசைமீதிருந்தாய் மடியின் மீதமர்ந்தாய்
கையகப்படுத்திய எனை உன்னகப்படுத்தி வென்றாய்
பேசி உறவு வளர்த்த எம் வாயதனில் பூட்டுடுத்தி
ஆள் காட்டி விரலைக்கொண்டு அதிகாரம் செய்ய வைத்தாய்
வீசி நடந்த கையின் விரலசைவில் மொழி பகிர்ந்து
தோல் கொடுக்கும் தோழர்களை நெடுந்தூரம் தொலையசச்செய்தாய்
தினம் மடியும் உனைக்காக்க உயிர் கொடுக்கும் தந்தையவன்
கணம் விடியும் நிலை தொட்டு உன் திரையில் தஞ்சமவன்
உன்வசமே மாந்தரிவர் மீள வழி அறியாரே
பின் வருமாம் சார்ந்த இளம் சந்ததியும் சரிந்தாரே
குருதி வேகம் கொண்ட இளஞ்சிங்கங்களின் மூளைத்திறன்
பருதி தோன்றி மறைந்த
உணவுச்சக்கரத்தின் உயிர் நாடி
கனவை மாய்த்து வந்தாய் எமைத்தேடி
ஞாயிறு திங்கள் வரிசை நியதி
திங்களைத்தீர்த்த ஞாயிறு தினம் விதி
இதமே துவக்கம் எரித்தே மயக்கம்
கருணையின் பரிசா மெய்க்கனிமம்
நீரின்றி வாடும் பசுமை உண்டு
தண்ணீரைத்தேடும் அச்சுமை இன்று
அறிவீனர் நாமாய் செய்த மடந்தை
பார் தேவையும் தீயாய் பெய்ய உடந்தை
மழலையின் வண்ணம் மாறாதிருக்குமோ
தொழிலியர்ப்பாவைகள் கன்னம் கருக்குமோ
இரை தேட படைப்புகள் வெளியே செல்லவே
பிறை தேடி வரும்வரை வீரியம் குறைத்திடு
இறைவனை விட்டு சொல்லச்சொல்லவா
பரிவிலா உன்னைத்தனியச்செய்யவே