சிகரட்
அறியாத தனிமைதனில் கூட்டாக்கி உனை வைத்தான்
புரியாமல் இனிமை என பாட்டாக்கி தனில் பதித்தான்
உன் சினை அறியாதவன் எரித்த கணை நீ ஏன் சீற்றம் கொண்டாய்
தன் உயிர் சுவாசத்துடன் கலந்தவன் மெய்யதனுள் மாற்றம் செய்தாய்
இரு விரலால் உனை ஏந்தி கடைசி வரை அவன் பிடிக்க
ஒரு கரலாம் உறவுதனை சோகமது சீரழிக்க
வைய்யகம் தூற்றும் உனை கையகப்படுத்தி வாழ்ந்த நிலை
கல்லறைக்கு கொண்டு சென்றுவிட்ட கடும் இலைப்புகையே. ......அழிந்துவிடு.......அழிந்துவிடு