அகங்காரம் கொண்டவனே

அகங்காரம் கொண்டவனே!

ஊர் எனது உலகம் எனது
நீர் எனது நிம்மதி எனது
வான் எனது வங்கம் எனது
கான் எனது கானகம் எனது
மழை எனது மரம் எனது
மலை எனது மகுடம் எனது
வயல் எனது வாய்க்கால் எனது
நதி எனது நங்கை எனது
பணம் எனது பதவி எனது
கடைசியில் காற்றும் எனது

அத்தனைக்கும் ஆசைப்பட்டாயே
அகங்காரம் கொண்டவனே!
பித்தனாக அலைகிறாயா
பிழைக்க வழிதேடி?
சாதி தேடவில்லை
மதம் நாடவில்லை
இப்போது பார்...
எனது எனது என்றுரைத்த
எதுவுமே உனக்கில்லை
கொரானாவைத் தவிர...

ஊர் உனது என்றாய்
வீட்டிற்குள் அடங்குகிறாய்...
உனது என்றுரைத்த எதுவும்
உனதில்லை இப்போது...
தனது என்றுரைக்காமல்
அனைத்தையும் அனுபவித்து
சுதந்திரமாய் திரிகிறது!
சுற்றியுள்ள உயிரனங்கள்...
மனிதன் தொல்லையின்றி
மகிழ்வுடனே அலைகிறது!

எழுதியவர் : திருமகள் (24-Mar-20, 4:52 pm)
சேர்த்தது : திருமகள்
பார்வை : 106

மேலே