திருமகள் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : திருமகள் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2020 |
பார்த்தவர்கள் | : 895 |
புள்ளி | : 26 |
என்னுள் என்னை தேடுகிறேன்.
எனை மீட்டதும் இயம்புகிறேன்...
பெற்றால்தான்பிள்ளையா?
அன்பான மனம் கொண்டால்
அனைவருமே அன்னைதான்!
ஆதரவுக்கரம் அளித்தால்
அவரும் அன்னைதான்!
கண்களில் கருணை ஏற்றால்
காப்பவரும் அன்னைதான்!
பசிக்கு உணவளித்தால்
படைப்பவரும் அன்னைதான்!
அறிவுக்குச்சுடர் தந்தால்
அனுதினமும் அன்னைதான்!
பாசத்தை தினம் தந்தால்
பெறாவிடினும் பிள்ளைதான்!
உள்ளத்து உவகையுடன்
உலகினில் நீ நடைபோட
தன்னலம் கருதாது
தரணியில் அன்போடு
தாயைப்போல் காத்திடுவார்!
ஏணிப்போல் ஏற்றிவிட்டு
எதிர்ப்பார்ப்பு ஏதும் இன்றி
இயங்கிடவே காரணம்
பெறாவிட்டாலும் நீ பிள்ளைதான்!
அதனாலே அவனியிலே
அனுதினமும் உனை எண்ணி
காத்திடுவர் அனைவருக்கும்
நீ பிள்ளைதான் எந்நாளும்!
இதயமது வலிக்கையிலே
இனியகீதம் பிறந்திடுமா?
கூண்டில் கிளி அடைபட்டால்
குதூகலம்தான் கிடைத்திடுமா?
கண்கள் துயில் கொண்டாலும்
காட்சிகள்தான் மறைந்திடுமா?
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம்தான் மகிழ்ந்திடுமா?
உலகத்தார் முன்னிலையில்
உருவங்கள் இடும் வேஷம்
பணத்திற்கு தரும் மதிப்பு
பைங்கிளிக்கு கிடைக்கிலையே!
இன்று மாறும் நாளை மாறும்
என்றெண்ணி எதிர்பார்த்து
எந்தநாளும் மாறலையே!
ஏக்கங்கள் தீரலையே!
கண்ணின்மணி நீ எனக்கு
காதலன் தான் நான் உனக்கு
சொன்ன சொல்லும் மறந்தாச்சு!
சோகங்களும் நிறைஞ்சாச்சு!
பாரதியின் பாட்டினாலே
பாவை நான் திடம் வளர்த்தேன்!
பாரினிலே வாழ்ந்தாக
பக்குவத்தை மீட்டெடுத்தேன்!
ஓம் சாந்தி
மண் எனதில்லை ஓம் சாந்தி!
விண் எனதில்லை ஓம் சாந்தி!
காற்று எனதில்லை ஓம் சாந்தி!
கதிரும் எனதில்லை ஓம் சாந்தி!
சாதி எனக்கில்லை ஓம் சாந்தி!
மதம் எனக்கில்லை ஓம் சாந்தி!
செல்வம் எனதில்லை ஓம் சாந்தி!
செருக்கு எனதில்லை ஓம் சாந்தி!
மனிதம் எனதாகும் ஓம் சாந்தி!
மாற்றம் எனதாகும் ஓம் சாந்தி!
பரிவு எனதாகும் ஓம் சாந்தி!
பாசம் எனதாகும் ஓம் சாந்தி!
வாழ்க்கை அனைவருக்கும் ஓம் சாந்தி!
வளங்கள் அனைவருக்கும் ஓம் சாந்தி!
பூமி அனைவருக்கும் ஓம் சாந்தி!
பொருள்கள் அனைவருக்கும் ஓம் சாந்தி!
பூமி காத்திடுவோம் ஓம் சாந்தி!
புரட்டை விரட்டிடுவோம் ஓம் சாந்தி!
உயிர்கள் நேசிப்போம் ஓம் சாந்தி
அகங்காரம் கொண்டவனே!
ஊர் எனது உலகம் எனது
நீர் எனது நிம்மதி எனது
வான் எனது வங்கம் எனது
கான் எனது கானகம் எனது
மழை எனது மரம் எனது
மலை எனது மகுடம் எனது
வயல் எனது வாய்க்கால் எனது
நதி எனது நங்கை எனது
பணம் எனது பதவி எனது
கடைசியில் காற்றும் எனது
அத்தனைக்கும் ஆசைப்பட்டாயே
அகங்காரம் கொண்டவனே!
பித்தனாக அலைகிறாயா
பிழைக்க வழிதேடி?
சாதி தேடவில்லை
மதம் நாடவில்லை
இப்போது பார்...
எனது எனது என்றுரைத்த
எதுவுமே உனக்கில்லை
கொரானாவைத் தவிர...
ஊர் உனது என்றாய்
வீட்டிற்குள் அடங்குகிறாய்...
உனது என்றுரைத்த எதுவும்
உனதில்லை இப்போது...
தனது என்றுரைக்காமல்
அனைத்தையும் அனுபவித்து
சுதந்திரமாய் திரிகிறது!
சுற்றியுள்ள உயிர
சிரிக்கும் என் செல்லம்மா!
சீக்கிரம் என் பக்கம் வா!
சிதறுகின்ற முத்துக்களை
சிந்தாமல் நான் அள்ளவா?
பால் நிலாவும் நாணுமே
பாவை உன்னை பார்க்கையில்!
பார்க்கும் கண்கள் அனைத்துமே
பரவசத்தில் விரியுமே!
நாடி வந்த என்னையே
நாட்கணக்கில் வதைப்பதேன்?
தேடி வந்தேன் பாரம்மா!
தேன்மொழியே கேளம்மா!
பாழும் மனம் துடிக்குது!
பாசம் நெஞ்சை அடைக்குது!
பாவி உயிர் பிரியுமுன்னே
பதில் உரைப்பாய் செல்லம்மா!
நீ எந்தன் பொன்னம்மா!
உன் நினைவு எந்தன் கண்ணம்மா!
கண்ணில்லாத குருடனாய் எனை
காண உந்தன் விருப்பமோ?
காதல் தன்னை உணரம்மா!
காத்திருப்பேன் நானம்மா!
காலம் வேகம் உருளுமுன்
கனிந்திடுவாய் செல்லம்மா!
1987
மூணாம் வகுப்பு "ஏ" பிரிவு, மெயின் ரோட்டை ஒட்டி இருந்த சிதிலமடைந்த மதில் சுவர்களுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆலம் செடிகள் சுவர்களில் முளைத்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கட்டிடங்கள் வெள்ளை சாயம் போன பழுப்பு நிறத்தில், அந்த கிராமத்தின் அடுத்த தலைமுறைகளுக்கு வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.நடுவே இருந்த கம்பத்தில் மூவர்ணக் கொடி நிமிர்ந்து பறக்க காற்றை தேடிக்கொண்டிருந்தது. காக்கி டவுசர் பையன்களும், நீல பாவாடை பெண்களும் அங்குமிங்குமாக
முழு ஆண்டுத்தேர்வு மும்முறத்தில் பரபரத்து கொண்டிருந்தனர். தலைமையாசிரியரின் அறைக்கு நேர் எதிராகத்தான் அவனின
யாதுமாகி நின்றையரே...
கைகள் கோர்த்த அந்த நொடி
எனைச் சூழ்ந்த உலகம்
இருண்டு போனதே...
இதயம் மட்டும் ஏனோ ஏனோ
ஒளி பிழம்பாய் ஆனதே ...
நிறை இழந்த என்னை
நீர்க்குமிழாய் உன் பாசம் ஈர்க்குதே ...
அணு அணுவாய் நிகழும்
வேதி மாற்றங்கள் ...
புது பாதை காட்டுதே..
கைக்கிளை அல்ல நான்,
உன் கைக்குள்ளேயே என்றும்தான்
என பார்வை பூட்டுதே..
ஹார்மோன் செய்யும்
வேலை தானோ
என்ற நினைப்பும்
வீணாய் போனதே..
தொல்காப்பியக் களவொழுக்கம்
பத்தும் சிறகாய் பூத்ததே...
செம்புலப் பெயல்நீர் போல
என் உயிர் நினதானதே...
என் கண்ணின் பாவை
என்றால் உன் பிம்பம் சுருங்குமன்றோ..
செம்புனல் நீ ஆனதால்
உயிர்மெய்யும் விரி
அன்னைப் பேரழகு!
ஆடும் மயிலழகு!
இளந்தளிர் அழகு!
ஈர்க்கும்பெண் பேரழகு!
உருகும் மெழுகழகு!
ஊதும் குழல் இசையழகு!
என்றும் தமிழழகு!
ஏங்கும் பாசமழகு!
ஐம்பூதங்கள் அழகு!
ஒற்றையடி பாதையழகு!
ஓடும் நதி பேரழகு!
ஔவை தமிழழகு!
அலைபாயும் கடலழகு!
சிப்பிக்குள் முத்தழகு!
சிரிக்கும் மலரழகு!
வலம்புரி சங்கழகு!
வான்நிலா பேரழகு!
மழலைக் குரலழகு!
மாலை இசை அழகு!
பெய்யும் மழை பேரழகு!
பேசும் கிளியழகு!
மலையருவி அழகு!
மாங்குயில் அழகு!
கவிதைக்கு பொய்யழகு!
காதலுக்கு மெய்யழகு!
உனக்குள் நான் அழகு!
எனக்குள் நீ அழகு!
நம் வாழ்வு பேரழகு!
நல்லிதயம் அழகு!
கண்ணம்மா கண்ணம்மா!
கவனித்தால் என்னம்மா?
காதலுக்கு ஏங்கிடும்
காதலனை பாரம்மா!
இராப்பகலாய் நிற்கிறேன்
ராணி உன்னை காணவே!
ராசாத்தியை காணாமல்
இரண்டு கண்கள் வாடுதே!
வாடும் கண்ணை பாரம்மா
வாசல் வந்து நில்லம்மா!
வாங்கிவந்த மலர்களை
வாடுமுன்னே சூடம்மா!
காத்திருந்து காத்திருந்து
கண்கள் இரண்டும் பூக்குதே!
பூத்திருந்து பூத்திருந்து
புத்திமுழுதும் நிறையுதே!
ஒரு வார்த்தை சொல்லம்மா!
ஓர் உயிரை வெல்லம்மா!
ஆண்டாயிரம் ஆனாலும்
உன்மனமாள்வேன் நானம்மா!
கண்ணுக்கு மணியாக
காத்துநிற்பேன் நாளுமே!
கவலைகள் நெருங்காமல்
பார்த்துக்கொள்வேன் நானுமே!
சிந்தாமணியே சிரியம்மா!
சிந்தையில் என்னை கொள்ளம்மா!
சீக்கிரமாக உன் பதிலை
சிரி
அழகான குடும்பத்தில்
அவதரித்தால் அதுவாழ்க்கை
அன்பான அம்மாவை
அனுசரித்தால் அதுவாழ்க்கை
ஆயுளுக்கும் அப்பாவை
புரிந்திருந்தால் அதுவாழ்க்கை
அக்காள் தம்பியுடன்
இணைந்திருந்தால் அதுவாழ்க்கை
அன்புடனே இல்லாளை
அனணத்திருந்தால் அதுவாழ்க்கை
ஆபத்பாந்தவனாய் கரம்நீட்டி
மகிழ்ந்திருந்தால் அதுவாழ்க்கை
எளிமையிலும் எண்ணங்கள்
உயர்ந்திருந்தால் அதுவாழ்க்கை
ஏணிபோல் அனைவரையும்
ஏற்றிவிட்டால் அதுவாழ்க்கை
பொய்களை ஓட்டிவிட்டு
புத்தனானால் அதுவாழ்க்கை
எத்தனாக இல்லாமல்
ஏற்றம் கண்டால் அதுவாழ்க்கை
கடமையே கண்ணாகக்
கருதினால் அதுவாழ்க்கை
கற்கண்டு வார்த்தைமட்டும்
கதைத்திட்டால் அதுவாழ்க்கை
ஏழைகளை இரக
பருவ முட்டையில்
ஆண் கோது உடைந்து
பெண்மை கரு மனதில்
குலுங்குவது எங்கள் குற்றமா?ஐயா!
வீட்டிற்கு வெளியே
எறிந்த காற்செருப்பாகி விட்டோம்...
சமூக ஊசிகள் குத்தி விளையாடும்
பொம்மைகளாகி விட்டோம்...
வயிற்றை நனைக்க
துளிகள் தேடி நாக்கு வெட்டப்பட்டோம்...
திசைகள் கூனி கருத்து நிற்க
சிவப்பு விளக்கிற்குள் வெளிச்சமாகிவிட்டோம்....
பச்சிளம் குழந்தை கண்ணீர்
கக்கினால் தாய்ப்பால் விருந்தாகும்...
சில வருடங்களே பிறந்த பச்சிளம்
உணர்வுகள் உண்மை மென்றால்
வாழ்வே ஊமை ஆகுது ஐயா!
ஏன் கண்களால் வேடிக்கை ஊதுகிறீர்
ஏன் செவிக்குள் சாய்ந்து கொள்கிறீர்
ஏன் இழிப்பால் சுடுகல் கொட்டுகிறீர்
நாங்
ஆற்றங்கரை ஓரத்திலே
அழகழகாய் தென்னைமரம்
ஆளுக்கொரு மரம்பிடித்து
அனுதினமும் ஆர்ப்பாட்டம்
ஆற்றில் நிதம்இறங்கி
ஆட்டங்கள் போட்டுவிட்டு
அம்மா அழைத்தப்பின்னும்
ஆளுக்கொரு திசைபயணம்
அக்காலம் நினைத்தாலே
அத்தனையும் இனிக்கிறதே...
பிள்ளைப் பருவமதை
பெற்றிடவே ஏங்கிடுதே...
பள்ளியில் கொண்டாட்டம்
படிக்கையில் திண்டாட்டம்
ஆசிரியர் அழைக்கையிலே
அக்கணமே பிடிஓட்டம்
விளையாட்டு அதில்நாட்டம்
வீதிதோறும் தோழர்கூட்டம்
விண்ணைப் பிடிக்க எண்ணி
விருப்பமுடன் பலதிட்டம்
கவலையே இல்லாத
கள்ளமில்லா பிராயத்தை
எண்ணி எண்ணி ஏங்குகிறேன்...
ஏக்கத்துடன் தூங்குகிறேன்...
கல்லூரிப் பருவமதில்
கலகலப்பில் காலங்கள்
காளையர் கன்னியரை
கவர்ந்திழுக்
நண்பர்கள் (4)

Senthilsamrat
Chennai

பாலாஜி காசிலிங்கம்
சென்னை

சேகர்
Pollachi / Denmark
