பக்குவம்

இதயமது வலிக்கையிலே
இனியகீதம் பிறந்திடுமா?
கூண்டில் கிளி அடைபட்டால்
குதூகலம்தான் கிடைத்திடுமா?
கண்கள் துயில் கொண்டாலும்
காட்சிகள்தான் மறைந்திடுமா?
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம்தான் மகிழ்ந்திடுமா?
உலகத்தார் முன்னிலையில்
உருவங்கள் இடும் வேஷம்
பணத்திற்கு தரும் மதிப்பு
பைங்கிளிக்கு கிடைக்கிலையே!
இன்று மாறும் நாளை மாறும்
என்றெண்ணி எதிர்பார்த்து
எந்தநாளும் மாறலையே!
ஏக்கங்கள் தீரலையே!
கண்ணின்மணி நீ எனக்கு
காதலன் தான் நான் உனக்கு
சொன்ன சொல்லும் மறந்தாச்சு!
சோகங்களும் நிறைஞ்சாச்சு!
பாரதியின் பாட்டினாலே
பாவை நான் திடம் வளர்த்தேன்!
பாரினிலே வாழ்ந்தாக
பக்குவத்தை மீட்டெடுத்தேன்!

எழுதியவர் : திருமகள் (24-Apr-20, 8:56 am)
சேர்த்தது : திருமகள்
Tanglish : PAKKUVAM
பார்வை : 228

மேலே