காதல்
மயிலாட்டம் ஆடி வந்தாள் மயிலாட்டம் அவள்
நான் வியக்க வண்ணமயமாய்....... இவள்
கார்முகில் கூந்தல் தந்ததோர் கருப்பு
அழகு வதனம் சிவந்தது தாமரையாய் சிவப்பு
இரு விழிப்படலம் பாற்கடலன்ன வெண்மை
அதில் துள்ளும் கருவண்டன்ன கண்ணின்மணிகளோர் கருப்பு
செக்க சிவந்த பவளங்களாய் அதரங்கள்...... சிவப்பு
அலர்ந்த அதரங்களுக்குள் உள்ளடங்கிய
வெண்முத்துக்கலன்னா பல்வரிசை அவள் சிரிக்க
ஒளிரும் வெண்முத்து ...........வெண்மை
காதுகளில் ஒளிரும் நீல ரத்தினதோடு ...... நீலம்
நீண்ட அழகிய கழுத்தில் ஆரம் பசுந்தங்கம் ..... மஞ்சள்
இவள் அங்கம் இப்படி பல வர்ணங்களில் ஒளிர
கண்ணியவள் பூமிக்கு வந்த வண்ண வண்ண
வான வில்லாய் என்முன் ஒளிர .....
மயிலாட்டம் ஆடி வந்தாள் மயில் ஆட்டம்
என் மனம் குலுங்க என்னுள் புகுந்தாளே