கதிரவனும் நிலவவளும்

காலை கதிரவனும்

கண் சிமிட்டும் நிலவவளும்

காதல் கொண்டனவோ - அதன்

காரணமாய் அலைந்தனவோ....

காலை மாலையென

கதிரவனும் தான் அலைந்து

காதல் நிலவவளை

காணாமல் தான் நொந்து

தேடி தேடியே தினமும் வலம் வந்து

தேன்நிலவவளும் தேய்பிறையாய் தான் தேய்ந்து....

நிலவவளை காணாத கவலையிலே

மறைவானோ கதிரவனும் மாலையிலே

கதிரவனின் கதிர்களதன்
நினைவினிலே - குளிர்

காய்வாளோ நிலவவளும் இரவினிலே.....

எழுதியவர் : சுவாதிகுணசேகரன் (24-Apr-20, 4:00 am)
பார்வை : 435

மேலே