கருத்தம்மா

என்னை கவர்ந்த கருத்தம்மா
கருவேல காட்டுக்குள்ள
கருவக்குச்சி வெட்டதான்
வீச்சருவா வச்சிக்கிட்டு 
வீரநட போட்டிடுவாள்

மோகம் கொண்ட
கருவமுல்லோ ஆங்காங்கே
முத்தமிடும் கருத்தம்மா
காணாது விட்டிடுவாள்

ஆடுகோழி அழுதாலும்
மார்போடு அணச்சிடுவாள்
அந்த வைகை ஆத்தங்கரயிலே
கொஞ்சம் அழுதும் தீர்த்திடுவாள்

காயம்பல கண்டவள்
கண்ணில் காட்டமாட்டாள்
கவலை பல உள்ளபோதும்
உள்ளம் உடைய மாட்டாள்

வியர்வைசிந்தி உலைச்சிடுவாள்
அத முந்தானயில முடிஞ்சிடுவாள்
தனக்குனு ஏதும் செய்யமாட்டாள்
தானம் பல செஞ்சிடுவாள்

ஆணுக்கு அடங்கமாட்டாள்
எதிர்த்தும் கேட்டிடுவாள்
அன்பிற்கு அடங்கிடுவாள்
எதற்கும் அஞ்சமாட்டாள்
இந்த கருத்தம்மா

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே. இனியன் (23-Apr-20, 12:44 pm)
சேர்த்தது : இனியன்
Tanglish : karuthamma
பார்வை : 168

மேலே