ரூபியோனா யார்செய்தார் உன்னை
இலைஅசைய தென்றல் வரையும் ஓவியம் மலர்கள்
கலைநினைந்து நினைந்து உருவாக்கிய உயிரோ வியமோநீ ?
அலைபாயும் கூந்தல் காற்றிலாட அழகின் சிவந்த
சிலைவடிவாய் வந்து இளவேனில் மாலையில் உலாவரும்நீ
மலையை சிலையாக்கும் சிற்பியும் செதுக்கா உயிர்சிற்பமோ
விலையிலா மணியே ரூபியோனா யார்செய்தார் உன்னை ?
ரூபி ---சிவப்புக் கல்