உருமாறும் சக்தி
எரும்பை போல் மாறினேன்
உன் உழைப்பு
உன் உருவம் போல்
யார் கண்ணுக்கும் புலப்படவில்லை
என்றார்கள்
எருமை போல் மாறினேன்
என் உழைப்பை
உன் வயிற்றில் நிரப்பிதால்
யார் கண்ணுக்கும் நீ அழகாக இல்லை
என்றார்கள்
கரும்பை போல் மாறினேன்
என்னை பிழிந்து உறிந்து
பின் சக்கையாக்கி வீசினார்கள்
கரு மை போல் மாறினேன்
கருமை என்பது
அழகற்ற நிறம் என பேசினார்கள்
எத்தனை விமர்சனம்
என் முகத்தில் வீசினாலும்
அதை
என் கண்ணீரால் துடைக்காமல்
என் வியர்வையால் துடைத்தெறிந்து
என் முன்னேற்றத்திற்கான செயலியை
புதுப்பித்துக்கொண்டே இருப்பேன்..