பெற்றால்தான்பிள்ளையா

பெற்றால்தான்பிள்ளையா?

அன்பான மனம் கொண்டால்
அனைவருமே அன்னைதான்!
ஆதரவுக்கரம் அளித்தால்
அவரும் அன்னைதான்!
கண்களில் கருணை ஏற்றால்
காப்பவரும் அன்னைதான்!
பசிக்கு உணவளித்தால்
படைப்பவரும் அன்னைதான்!
அறிவுக்குச்சுடர் தந்தால்
அனுதினமும் அன்னைதான்!
பாசத்தை தினம் தந்தால்
பெறாவிடினும் பிள்ளைதான்!
உள்ளத்து உவகையுடன்
உலகினில் நீ நடைபோட
தன்னலம் கருதாது
தரணியில் அன்போடு
தாயைப்போல் காத்திடுவார்!
ஏணிப்போல் ஏற்றிவிட்டு
எதிர்ப்பார்ப்பு ஏதும் இன்றி
இயங்கிடவே காரணம்
பெறாவிட்டாலும் நீ பிள்ளைதான்!
அதனாலே அவனியிலே
அனுதினமும் உனை எண்ணி
காத்திடுவர் அனைவருக்கும்
நீ பிள்ளைதான் எந்நாளும்!

எழுதியவர் : திருமகள் (24-Apr-20, 10:59 pm)
சேர்த்தது : திருமகள்
பார்வை : 325

மேலே