சிந்திக்கவில்லை

ஊருணியின் ஓரத்திலே
உசந்து நிற்கும் ஆலமரம்,
ஆலமரம் தலைகுளிச்சு
அமைதியாய் நின்னாலும்,
தலையை காயவைக்க
தவமிருக்கும்
கதிரவனின் வரவுக்கு ,
கிளைகளிலுள்ள
இலைகளில் இருக்கும்
மழை நீரோ
மீண்டும் நீராட
துளித்துளியாய் ஊருணியை
தொட்டு மகிழும்,
தொட்டவுடன் ஆலமரமே
ஆடிப்போகும்,
அசைந்து விட்ட
குளத்து நீரில் .
ஒரு சிறு துளிதான்
ஓசையின்றி அசைத்தது,
மனிதன் தான் தன்னை இன்னும்
முழுமையாய் உணரவில்லை
சிந்திக்கவில்லை.

எழுதியவர் : கோ. கணபதி. (25-Apr-20, 10:16 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே