ஓம் சாந்தி

ஓம் சாந்தி

மண் எனதில்லை ஓம் சாந்தி!
விண் எனதில்லை ஓம் சாந்தி!
காற்று எனதில்லை ஓம் சாந்தி!
கதிரும் எனதில்லை ஓம் சாந்தி!

சாதி எனக்கில்லை ஓம் சாந்தி!
மதம் எனக்கில்லை ஓம் சாந்தி!
செல்வம் எனதில்லை ஓம் சாந்தி!
செருக்கு எனதில்லை ஓம் சாந்தி!

மனிதம் எனதாகும் ஓம் சாந்தி!
மாற்றம் எனதாகும் ஓம் சாந்தி!
பரிவு எனதாகும் ஓம் சாந்தி!
பாசம் எனதாகும் ஓம் சாந்தி!

வாழ்க்கை அனைவருக்கும் ஓம் சாந்தி!
வளங்கள் அனைவருக்கும் ஓம் சாந்தி!
பூமி அனைவருக்கும் ஓம் சாந்தி!
பொருள்கள் அனைவருக்கும் ஓம் சாந்தி!

பூமி காத்திடுவோம் ஓம் சாந்தி!
புரட்டை விரட்டிடுவோம் ஓம் சாந்தி!
உயிர்கள் நேசிப்போம் ஓம் சாந்தி!
ஒன்றாய் வாழ்ந்திடுவாம் ஓம் சாந்தி!

திருந்த ஒருவாய்ப்பு ஓம் சாந்தி!
திமிர்அடங்க ஒருவாய்ப்பு ஓம் சாந்தி!
மனிதம்வாழ ஒரு வாய்ப்பு ஓம் சாந்தி!
மகிழ ஒருவாய்ப்பு ஓம் சாந்தி!

எழுதியவர் : திருமகள் (26-Mar-20, 6:40 am)
சேர்த்தது : திருமகள்
Tanglish : OM santhi
பார்வை : 88

மேலே