தீமை செய்த நன்மை
தீமை செய்த நன்மை
சற்றே ஓரங்கட்டி
ஓய்வு கொள்கின்றன
காலில் கட்டிய சக்கரங்கள்!
சற்றே இளைப்பாறிக் கொள்கின்றன
ஆலாய்ப் பறந்த இறக்கைகள்!
நிதானமாக
நடக்கின்றன
சுவாசித்தலும்,
புசித்தலும்...
அளவளாவலின் எல்லை
தொடுகின்றன....
அளவாய் நடந்த பேச்சு வார்த்தைகள்!
இல்லத்திலேயே நடக்கின்றன உல்லாசப் பயணங்களுக்கே
உரித்தான
இனிய நிகழ்வுகள்..
எல்லாவற்றிலும் நன்மையுமுண்டு
தீமையுமுண்டு!
வியப்புறுகிறேன்
கொல்லும் வைரசும் அதற்கு
தரவானது கண்டு....

